என் மலர்
நீங்கள் தேடியது "Seedling struggle"
- சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
- பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கொங்கரம்பட்டு ஊராட்சிக்குபட்ட கனகதோப்பு கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
கொங்கரம்பட்டு கனகதோப்பு சாலை பல ஆண்டுகளாக சீரமைக்க கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தனர்.
க்ஷஆனால் இதுவரையில் எந்த ஓரு நடவடிக்கையும் எடுக்கவில்லை தற்போது மாண்டஸ் புயலால் பெய்த கனமழை காரணமாக கொங்கரம்பட்டு கனகதோப்பு சாலை சேறும் சகிதமாக உள்ளதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் இன்று காலை சேறும் சகிதமாக உள்ள சாலையில் நாட்டு நடவு செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி மாணவர்கள் நாட்டுநடவு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொதுமக்கள், மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
- தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த அனேரி கிராமத்தில் மண் சாலை அமைந்துள்ளது. இங்குதார்ச்சாலை அமைத்து தர அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை வைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இந்தச் சாலை குண்டும் குழியுமாகவும், சேறும், சகதியுமாக மாறியது.
இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அப்பகுதி மக்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத் திய பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடப்பதாக குற்றச்சாட்டு
- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே பாலானந்தல்-மங்கலம் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நேற்று நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் பாலானந்தல் கிராமத்தில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள், அனைவரும் மருத்துவமனை, பள்ளி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க, மங்கலம் செல்லும் சாலையை பயன் படுத்துகின்றனர். இந்த சாலை கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
குண்டும், குழியுமாக உள்ள சாலையில் குளம்போல் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால், வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும், இரவு நேரங்களில் நிலை தடுமாறிகீழே விழுந்து காயமடைவதாக வேதனையுடன் தெரிவிக் கின்றனர்.
இதேபோல், மங்கலம்-வெளுங்கனந்தல் இடையே உள்ள சாலைபடுமோசமாக உள்ளன. இதன் மொத்த தொலைவு 7 கி.மீ., ஆகும்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் முறையிட்டும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சேதமடைந் துள்ள சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மேலும், தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் காகித கப்பல் விட்டு, தங்களது எதிர்ப்பை இளைஞர்கள் பதிவு செய்தனர்.
அப்போது அவர்கள், சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.






