என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • கலெக்டர் முருகேஷ் தகவல்
    • வருகிற 28-ந்தேதி கடைசி நாள்

    திருவண்ணாமலை:

    2022-23-ம் நிதி ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ந்தேதி தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிப்பதற்கு திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். மேலும் குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

    இவ்விருதிற்கு awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். விண்ணப்பதாரரின் கையேட்டுடன் பயோடேட்டா மற்றும் பாஸ்போர்ட்டு சைஸ் போட்டோ 2, சுயசரிதை, சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படத்துடன், சேவையை பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு, சமூக பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று, கையேடு இரண்டு நகல்கள் (தமிழில்) போன்றவை இணைக்க வேண்டும். திருநங்கையை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.

    தேர்தெடுக்கப்படும் ஒரு திருநங்கைக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்பிக்க வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகும். இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    • பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது போலீஸ்காரர் இறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    போளூர் அடுத்த களம்பூர் குமாரசாமி காலனி பகுதியைச் சேர்ந்தவர் தேவா (வயது29). பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று முன்தினம் தேவா திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக சென்றார். பின்னர் பணி முடிந்து இன்று அதிகாலை வீட்டிற்கு செல்வதற்காக திருவண்ணாமலையில் இருந்து களம்பூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    கலசப்பாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு அருகே அதிகாலை 4 மணி அளவில் வந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த தேவா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கலசப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து தேவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது போலீஸ்காரர் இறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விவசாயிகள் மீண்டும் விடுத்த கோரிக்கையின்படி நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தப்படும்.
    • செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புத்தூர் பகுதியில் இன்று மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நான், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் உயர் அதிகாரிகள் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்கள், நிலக்கடலை , உளுந்து போன்ற பயிர்களை 2 குழுக்களாக சென்று ஆய்வு செய்தோம்.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் 87 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்று மாலை வரை ஆய்வு செய்ய உள்ளதால் அதன் பிறகு பாதிப்பின் விவரம் முழுமையாக தெரியவரும். மேலும் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 987 ஹெக்டேரில் உளுந்து, 462 ஹெக்டேரில் நிலக்கடலை, 16900 ஹெக்டேரில் நெற்பயிர்கள் என 18324 ஹெக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இன்று முழுவதும் கள ஆய்வு செய்து நாளை சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பயிர் சேத விவரங்கள் குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்க உள்ளோம்.

    அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை பெற்று தருவது குறித்தும் , பாதிப்புக்கு ஏற்றவாறு எவ்வளவு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பது குறித்தும் அறிவிப்பார்.இதுவரை 11.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 58 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நினைக்கப்பட்டது.

    ஏற்கனவே விவசாயிகள் நெல்லின் ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அந்த கோரிக்கையின் படி மத்திய அரசுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி வலியுறுத்தினார். அதை தொடர்ந்து மத்திய அரசு நெல்லின் ஈரப்பதம் அளவை 19 சதவீதமாக உயர்த்தியது. இந்த நடைமுறை அடுத்த மாதம் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தற்போது விவசாயிகள் மீண்டும் விடுத்த கோரிக்கையின்படி நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தப்படும்.

    தமிழ்நாட்டில் திறந்த வெளி சேமிப்பு கிடங்கு இருக்கக் கூடாது என்பதற்காக ரூ.238 கோடி மதிப்பில் செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். வருகிற 11-ந் தேதி 1.66 லட்சம் மெட்ரிக் டன் சேமித்து வைக்க கூடிய செமி குடோன்களை முதல் கட்டமாக முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். கடந்த காலங்களில் 350 அரவை ஆலைகள் தான் இருந்தன. ஆனால் தற்போது 750 அரவை ஆலைகள் உள்ளன.

    செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. வருகிற ஏப்ரல் மாதம் முதல் இந்தியா முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கணவன்-மனைவி பைக்கில் சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 48). இவரது மனைவி பவானி (43). கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் மருதாடு நோக்கி சென்றனர்.

    மருதாடு கிராமம் அருகே செல்லும் போது இவர்க ளுக்கு பின்னால் வந்த கார் திடீரென மொபட் மீது மோதியது.

    இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச் சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் மேல் சிகிச்சைக்காக பவானி செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட் டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டரை பாராட்டி உலக சாதனை விருது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மத்திய அரசின் நீர்வளத் துறையினால் அறிவிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் நடவடிக்கையை மேற்கொள்ள முதல்-அமைச்சர் அறிவுறுத்தினர்.

    அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 30 நாட்களுக்குள் 1,121 பண்ணை குட்டைகள் அமைத்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

    மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் திருவண்ணா மலை மாவட்டத்தை சேர்ந்த 18 ஒன்றியங்களில் உள்ள 600 கிராம ஊராட்சிகளில் உள்ள 1333 கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை சுற்றி மீள் நிரப்பு (மீட்றெடுக்கும்) கட்டமைப்பு களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கான பணிகளை கடந்த 20-ந் தேதி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். இந்தப் பணிகள் கடந்த 2-ம் தேதிக்கு முன்பு நிறைவு பெற்றது.

    இதன் மூலம் தற்போது உபயோகத்தில் இல்லாத 1333 ஆழ்துளை குழாய் கிணறுகளை சுற்றிலும் 3 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலம் மற்றும் 2.5 ஆழம் உள்ளவாறு குழிகளை ஏற்படுத்தி ஆழ்துளை கிணறுகளின் குழாய்களில் நீர் கசிவுத் துளைகளை அமைத்து மண்புகா வண்ணம் வலை சுற்றி அந்த குழி முழுவதிலும் ஜல்லி கற்களை நிரப்பி அதன்

    மேற்பரப்பில் அரை அடி உயரத்திற்கு குழியை சுற்றி சுவரும் எழுப்பப்பட்டு உள்ளது. மேலும் ஜல்லி நிரப்புவதற்கு முன்பு மழை நீர் உட்பகுவதற்கு வசதியாக குழியின் 4 பக்கத்திலும் பக்கத்திற்கு மூன்று குழாய்கள் விதம் 12 குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஒரு மீள் நிரப்பு கட்டமைப்பு ரூ.50,000 என்ற அடிப்படையில் மொத்தம் 1333 மீள் நிரப்பு கட்டமைப்புகள் ரூ.6 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆண்டு முழுவதும் சராசரியாக 1046 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பெறும் நிலையில் மழை நீர் இந்த நிலத்தடி நீர் மீள் நிரப்பு கட்டமைப்புகளின் மூலம் நிலத்திற்குள் செலுத்தப்பட்டு 4 முதல் 5 அடி வரை நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த மாவட்டமும் செய்திடாத இந்த புதிய முயற்சியை திருவஷ்ணாமலை மாவட்டம் நிகழ்த்தியது. இதனையொட்டி எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனம், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனம் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம் ஆகிய உலக சாதனை நிறுவனங்கள் மூலம் பல ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அதற்கான சான்றிதழ்களை நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் மற்றும் கூடுதல் கலெக்டர் வீர பிரதாப் சிங் ஆகியோரிடம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் வழங்கி கவுரவித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அமித் ஹிங்க்ரோனி, சத்யஸ்ரீகுப்தா, பாவனா ராஜேஷ், சவுஜன்யா, அர்ச்சனா ராஜேஷ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தினைச் சேர்ந்த செந்தில்குமார், சாந்தாராம், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தை சேர்ந்த ஜெகநாதன், யாஷ்வந்த் சாய், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன், நாகஜோதி, திருமூர்த்தி, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் அருண், உதவி இயக்குனர் (வளர்ச்சிகள்) சரண்யா தேவி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அக்காள் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் காமராஜ் நகரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகள் கள் டில்லிராணி (வயது 9), ஜெயசுதா (15). டில்லிராணி கண்ணமங்கலம் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் அக்காள் - தங்கை இருவரும் மொபட்டில் கண்ணமங்கலம் நோக்கி சென்றனர். மொபட்டை ஜெயசுதா ஓட் டினார்.அப்

    போது, முன்னால் சென்ற வேன் திடீரென திரும் பிய போது, எதிர்பாராதவித மாக வேனின் பின்பு றம் மொபட் மோதியது. இதில் அக்காள்-தங்கை இரு வரும் படுகாயம் அடைந்த னர்.

    உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டில்லிராணி பரிதாபமாக உயி ரிழந்தாள். ஜெயசுதா சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக லோகநாதன் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அல்லிராணி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகு மார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்வி அதிகாரி நேரில் ஆய்வு
    • மாணவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டு

    வந்தவாசி:

    வந்தவாசியில் தனியார் மெட்ரிக் பள்ளி சார்பில் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் செயல் திறன் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன. இதில் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக இருக்க சென்சார் மூலம் கருவி கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் கதவுகளில் சென்சார் பொருத்தப்பட்டு செல்போன் மூலம் தானாக அன்லாக் செய்வது குறித்து பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்தனர்.

    கண்டுபிடிக்கப்பட்ட படைப்புகளை இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் நேரில் பார்வை யிட்டார். அப்போது மாணவர்களின் படைப்புகளை ஆசிரியர்கள் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.

    • மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்
    • தியாகி அண்ணாமலை பள்ளி 52-வது ஆண்டு விழா நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 52-வது ஆண்டு விழா நடைபெற்றது.

    இவ்விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று பேசினார். முதன்மை கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி தலைமை தாங்கினார்.

    மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கி.காளிதாஸ், பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜெயக்குமாரி ஆகியோர் முன்னலை வகித்தார்.

    பள்ளியின் 52-வது ஆண்டு விழாவில் கலைநிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சின்னதிரை நடிகர் டி.சித்து, சின்னத்திரை ஸ்ரேயா அஞ்சன் ஆகியோர் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி பின் பேசினார்.

    திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி 52வது ஆண்டு விழாவில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும் மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் நல்ல நிலையில் உள்ளார்கள் எனவும், இவர்களை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு பயிற்சியும் பல நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டும் என சின்னத்திரை நடிகர் டி.சித்து பேசினார்.

    விழாவில் தேசிய விருது பெற்ற சார்லி சாப்லின் ஆப் இந்தியா யோனாவின் மேஜிக்ஷோ நடைபெற்றது.

    முடிவில் உதவி தலைமை ஆசிரியர் மு.சண்முகம் நன்றி கூறினார்.

    இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆர்.வெங்கடேசன், இசைஆசிரியர் டி.பாரதி, ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

    • இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 10.41 மணி அளவில் தொடங்கியது.
    • இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 10.41 மணி அளவில் தொடங்கியது. இதனால் நேற்று இரவு 9 மணி வரை சிலர் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதன் பின்னர் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் செல்லும் கிரிவலப்பா தையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.48 வரை இருப்பதால் இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    • தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி ஜெகதீசனை தேடினர். அப்போது ஜெகதீசனை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்துப்பட்டு:

    சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 28). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இவரது தாத்தா இறந்து விட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜெகதீசன் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த சென்னந்தல் கிராமத்திற்கு வந்தார்.

    நேற்று மாலை ஜெகதீசன் தவணி மேட்டூர் சாலையில் உள்ள விவசாய கிணற்றின் அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து விட்டார். நீண்ட நேரம் ஆகியும் ஜெகதீசன் வீடு திரும்பாததால் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் தேடி பார்த்தனர்.

    கிணற்றின் அருகே ஜெகதீசன் செருப்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பெரணமல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி ஜெகதீசனை தேடினர். அப்போது ஜெகதீசனை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் அவரது உடலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த பெரணமல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாசில்தார் எச்சரிக்கை
    • 6-ந் தேதி அதிகாரிகளுடன் ஆக்கிரப்பு அகற்றும் பணி நடைபெறும்

    ஆரணி:

    ஆரணி டவுன் கோட்டை மைதானத்தில் மாவட்ட மினி விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது.

    வெளிப்பகு தியில் புறங்களிலும் கடைகள், டைப்பிஸ்டு சென்டர், ஓட்டல், காய்கறி கடை என 50க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டுள்ளன.

    தற்போது கோட்டை மைதானத்தை சுற்றிலும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு நிதிஉதவி பெறும் பள்ளி தாலுகா அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம் போலீஸ் நிலையங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சார் பதிவாளர் அலுவலகம், கருவூலம் அலுவலகம், வனத்துறை அலுவலகம். மற்றும் உழவர் சந்தை என அனைத்து அரசு அலுவலகங்களும் மக் கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதியாக செயல்பட்டு வருகிறது.

    ஆக்கிரமிப்பு கடைகளால் கோட்டை மைதானத்தை சுற்றிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் ஆரணிவருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்திருந்தனர்.

    அவரது பரிந்தரையின் பேரில் ஆரணி தாசில்தார் ஆர். ஜெகதீசன் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கு இன்று மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை) வரை 2 நாள் கெடு விதித்துள்ளார்.

    அதன்படி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் இல்லையெனில் 6-ந் தேதி (திங்கட்கிழமை) ஆரணி நகராட்சி அதிகாரிகளுடன் ஆக்கிரப்புகளை அகற்றும் பணி நடைபெறும் என தாசில்தார் ஜெகதீசன் எச்சரித்துள்ளார்.

    • மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் ஆத்திரம்
    • 3 பேர் மீது வழக்கு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பே கோபுர தெருவை சேர்ந்தவர் ராஜகிரி. இவரது மனைவி மஞ்சுளாதேவி (வயது 52). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான வினோதினிக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் சுரேஷ் என்பவருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுரேசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் வினோதினி கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சுரேஷ் கடந்த 28-ந் தேதி மஞ்சுளாதேவியின் வீட்டிற்கு சென்று வினோதினியையும், அவரது தாயையும் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து வினோதினியும், அவரது தாயையும் வீட்டை பூட்டி விட்டு அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

    பின்னர் சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் மஞ்சுளாதேவியின் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி சேதப்படுத்தியதாகவும் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து மஞ்சுளாதேவி கொடுத்த புகாரின் பேரில் அவரது மருமகன் சுரேஷ் மற்றும் உறவினர்கள் என 3 பேர் மீது திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×