என் மலர்
நீங்கள் தேடியது "Science fair at school"
- கல்வி அதிகாரி நேரில் ஆய்வு
- மாணவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டு
வந்தவாசி:
வந்தவாசியில் தனியார் மெட்ரிக் பள்ளி சார்பில் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் செயல் திறன் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன. இதில் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக இருக்க சென்சார் மூலம் கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கதவுகளில் சென்சார் பொருத்தப்பட்டு செல்போன் மூலம் தானாக அன்லாக் செய்வது குறித்து பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட படைப்புகளை இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் நேரில் பார்வை யிட்டார். அப்போது மாணவர்களின் படைப்புகளை ஆசிரியர்கள் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.






