என் மலர்
நீங்கள் தேடியது "மைதானத்தில் ஆக்கிரமிப்பு"
- தாசில்தார் எச்சரிக்கை
- 6-ந் தேதி அதிகாரிகளுடன் ஆக்கிரப்பு அகற்றும் பணி நடைபெறும்
ஆரணி:
ஆரணி டவுன் கோட்டை மைதானத்தில் மாவட்ட மினி விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது.
வெளிப்பகு தியில் புறங்களிலும் கடைகள், டைப்பிஸ்டு சென்டர், ஓட்டல், காய்கறி கடை என 50க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது கோட்டை மைதானத்தை சுற்றிலும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு நிதிஉதவி பெறும் பள்ளி தாலுகா அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம் போலீஸ் நிலையங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சார் பதிவாளர் அலுவலகம், கருவூலம் அலுவலகம், வனத்துறை அலுவலகம். மற்றும் உழவர் சந்தை என அனைத்து அரசு அலுவலகங்களும் மக் கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதியாக செயல்பட்டு வருகிறது.
ஆக்கிரமிப்பு கடைகளால் கோட்டை மைதானத்தை சுற்றிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரி செய்யவேண்டும் என பொதுமக்கள் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் ஆரணிவருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்திருந்தனர்.
அவரது பரிந்தரையின் பேரில் ஆரணி தாசில்தார் ஆர். ஜெகதீசன் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கு இன்று மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை) வரை 2 நாள் கெடு விதித்துள்ளார்.
அதன்படி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் இல்லையெனில் 6-ந் தேதி (திங்கட்கிழமை) ஆரணி நகராட்சி அதிகாரிகளுடன் ஆக்கிரப்புகளை அகற்றும் பணி நடைபெறும் என தாசில்தார் ஜெகதீசன் எச்சரித்துள்ளார்.






