என் மலர்
திருவண்ணாமலை
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, அடுத்த வெளுகம்பட்டு, கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ், (வயது25). திருவண்ணாமலையில் தனியார் செல்போன் கடையில் வேலை செய்து வந்தார்.
பிரகாஷ் கடந்த 3-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் வெளுகம்பட்டில், இருந்து சேத்துப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். மேல்வில்லிவலம், கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக்கில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ், பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சேத்துப்பட்டு, அரசு மருத்துவமனை முதல்உதவிசிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரகாஷ், சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபாக இறந்தார்.
இது குறித்து பிரகாஷின் தந்தை, சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயகுமார், வழக்கு பதிவு செய்து. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
- சென்னையில் மேஸ்திரி வேலை செய்து வந்தார்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, கண்ணனூர் பள்ளிகூட, தெருவை சேர்ந்தவர் விஜயகுமார், (வயது 30) இவர் சென்னையில் மேஸ்திரி வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 31ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டார். சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு திருவண்ணா மலை, அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ், நேற்று இரவு இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது தாய் மஞ்சுளா, சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவண்ணாமலை ேகார்ட்டு தீர்ப்பு
- ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கினார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் கந்தன். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இவர், கடந்த 2010-ம் ஆண்டு தமிழக அரசின் சிவகாமி அம்மையார் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சலுகை பெற வேண்டி அனைத்து ஆவணங்களுடன் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அந்த சமயத்தில் ஊரக வளர்ச்சி அலுவலராக இருந்த முனியம்மாள் என்பவர் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அனுப்புவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சமாக பெற்றார். அவரை திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஈஸ்வரமூர்த்தி லஞ்சம் வாங்கிய முனியம்மாளுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
- உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்
- விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் திருவண்ணாமலை உதவி கலெக்டர் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உதவி கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மதியம் 12.30 மணி வரை காத்திருந்த விவசாயிகள் திடீரென வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு வருகை தராத அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் விவசாயிகள் மதிய உணவு வாங்கி வந்து அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து சாப்பிட்டனர்.
பின்னர் அவர்களிடம் தாசில்தார் சுரேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தாசில்தார், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து உதவி கலெக்டர் மந்தாகினி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது உதவி கலெக்டர் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு விரைவில் மறு கூட்டம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- உதவி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
- பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்
ஆரணி:
ஆரணி அருகே மட்டதாரி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பிரேம்குமார் என்பவர் பதவி வகித்து வருகின்றார்.
இந்த கிராமத்தில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் மேம்பாடு பிரிவின் கீழ் ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் ஆதிதிராவிடர்களுக்கு பலபேருக்கு இலவச வீட்டுமனை வரவில்லை எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளன. இதனையடுத்து ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு முகாமில் மட்டதாரி கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தகுதியுள்ள நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.
இந்த மனுவில் கூறியதாவது:-
மட்டதாரி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று ள்ளதாகவும் ஏற்கனவே வீடு இருப்பவர்களுக்கும் அரசு பணியில் உள்ளவர்களுக்கும் வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளன.
தகுதி உள்ள நபர்களை வருவாய் துறையினர் விசாரணை செய்து மீண்டும் வீட்டுமனை பட்டா வழங்க கோரி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. அவரது மனைவி சந்திரா (வயது 47). இவர், கடந்த மாதம் 29-ந்தேதி ஆரணி-சேத்துப்பட்டு சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட் டார் சைக்கிள் திடீரென சந்திரா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்திரா சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவ மனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையிலும் சேர்க்கப்ப ட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த சந்திராவுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில், மூன்று மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. 4-வது மகளுடன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
- வேலூர் ஜெயிலில் அடைப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா மோட்டூர் கிராமம் நயம்பாடி பகுதியை சேர்ந்தவர் மனுநீதி (வயது 55), தொழிலாளி.
இவர், கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச முடியாத 13 வயது சிறுமியை கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சிறுமியின் உறவினர்கள் வந்தனர். இதை கண்ட மனுநீதி அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மனுநீதியை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
இரட்டை ஆயுள் தண்டனை
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மனுநீதிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த இரட்டை ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து மனுநீதியை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.
- விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன்வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் மாநில அரசு நிதி பங்களிப்புடன் கூடிய பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் 2021-22 கீழ் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்யும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் இதற்கு 3 சென்ட் நிலம் போதுமானது.
சொந்தமாக நிலம் உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் திட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும் திட்ட செலவின தொகை ரூ.7,50,000-ல் பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 40 சதவீத மானியம் ரூ.3 இலட்சம் மானியம் வழங்கப்படும்.
பட்டியல் பிரிவினர்களுக்கு 60 சதவீத மானியம் ரூ.4.50 லட்சம் மானியம் வழங்கப்படும். மேற்கண்ட திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் இத்திட்டத்தில் இம்மாவட்ட இலக்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படுமாயின் பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், வேலூர் அலுவலகத்தை (எண்.16, 5 வது மேற்கு குறுக்கு தெரு, காந்திநகர், காட்பாடி, வேலூர் -632006 (அலுவலக தொலைபேசி எண். 0416 2240329, அலைபேசி எண். 9384824248, மின்னஞ்சல் adfifvellore1@gmail.com) தொடர்பு பெற்று விண்ணப்பிக்குமாறு திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
- போளூர் ஒன்றியத்தின் சார்பில் நடந்தது
- மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.6,750 வழங்க வலியுறுத்தல்
போளூர்:
தமிழ்நாடு சத்துணவு சங்கங்களின் கூட்டமைப்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போளூர் தாலுகா அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இணை செயலாளர் கவுஸ் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் அனைத்து துறை ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றினார்.
வட்டத் தலைவர் அபுல்கான் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகநாதன் செல்வி சுசீலா, அபிதா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உழியர்களுக்கு அகவிலைப்படி உடன் ரூபாய் 6750/ மாதாந்திர ஓய்வூதியமாக வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி திட்டத்தில் பணிபுரியும் உழியர்கள் 50% அரசு பணியில் காலியிடங்களில் பணிமூப்பு படிப்பில் பதவி உயர்வு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஏற்படுத்தினர்.
முடிவில் மாவட்ட இணை செயலாளர் அம்பிகா நன்றி கூறினார்.
- இயற்கை விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருவண்ணாமலை:
கலசபாக்கம் விண்ணுவாம்பட்டு ஏரிகரையில் இயற்கை விவசாயிகள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் வரும் 9-ந் தேதி போளூரில் மரபணு மாற்றப்பட்ட கடுகு விதையை அனுமதிக்காதே என மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் உணவை நஞ்சாக்கும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளை தடை செய்யவும் உணவு கலப்படத்தை தடுக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கலசப்பாக்கம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த இயற்கை விவசாயிகள் மீனாட்சிசுந்தரம், லெனின், ராஜேந்திரன், சுமதி, கோபி, உமாசங்கர், பிரகலாதன், கமலநாதன்உள்பட பலர் பங்கேற்றனர்.
- நேர்த்திக்கடன் செலுத்தினர்
- செங்கம் தொரப்பாடி மாரியம்மன் கோவிலில் தைப்பூச விழா நடந்தது
செங்கம்:
செங்கம் அடுத்த தொரப்பாடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு முருகனுக்கு மாலை அணிந்து பக்தர்கள் அலகு குத்தியும், தேர் இழுத்து, கொதிக்கும் எண்ணெயில் வடை எடுத்தும் முல்படுகையில் நடந்தும் படுத்தும், மார்பின் மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தும் அந்தரத்தில் தொங்கியவாறு சென்று முருகன், மாரியம்மனுக்கு மாலை அணிவித்தும் தீபாராதனை செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
செங்கம் சுற்றுவட்ட பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகர் மற்றும் மாரியம்மனை தரிசித்தனர்.
- சாலையில் நடந்து சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அருகே உள்ள கோழிப்புலியூர் கூட்ரோடு மேலதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 68). இவர், அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த லாரி திடீரென அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேத்துப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






