உணவை நஞ்சாக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய வேண்டும்

இயற்கை விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
உணவை நஞ்சாக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய வேண்டும்
Published on

திருவண்ணாமலை:

கலசபாக்கம் விண்ணுவாம்பட்டு ஏரிகரையில் இயற்கை விவசாயிகள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் வரும் 9-ந் தேதி போளூரில் மரபணு மாற்றப்பட்ட கடுகு விதையை அனுமதிக்காதே என மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் உணவை நஞ்சாக்கும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளை தடை செய்யவும் உணவு கலப்படத்தை தடுக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கலசப்பாக்கம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த இயற்கை விவசாயிகள் மீனாட்சிசுந்தரம், லெனின், ராஜேந்திரன், சுமதி, கோபி, உமாசங்கர், பிரகலாதன், கமலநாதன்உள்பட பலர் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com