என் மலர்
திருவண்ணாமலை
- மூன்று பேரையும் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்ததாக தெரியவந்துள்ளது.
அட்டவாடி:
திருவண்ணாமலை மாவட்டம் அட்டவாடி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் வசந்த் பிரபு தலைமையிலான குழுவினர், அவர்கள் மூன்று பேரையும் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் மூன்று குழந்தைகள் தொழிலாளியாக பணிபுரிந்தது தெரியவந்துள்ளது.
- தனியார் ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் ேபாராட்டம்
- போலீசார் பேச்சுவார்த்தை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தனியார் மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அடி அண்ணாமலை ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் கண்ணன். அவரது மகன் முனியப் பன் (வயது 27), மின்வாரியத் தில் ஒப்பந்த பணியின் அடிப்படையில் தற்காலிக மின்ஊழியராக பணியாற்றி. வந்தார்.
இந்தநிலையில் இவரும், அவருடன் பணிபுரியும் கமலேஷ், வயர்மேன் குமார் ஆகியோர் கடந்த 6-ந்தேதி திருவண்ணாமலை டவுன் காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மின்இணைப்பு பழுதை சரி செய்ய சென்றனர்.
தொடர்ந்து முனியப்பன் மின்கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் இருந்து அவர் கீழே விழுந் தார்.
இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சிகிச் சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையிலும் சேர்க் கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி னர்.
விசாரணையில் முனியப் பன் மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பு பழுதை சரி செய் யும் போது தனியார் மருத்து வமனையில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால் ஒயரில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து முனியப்பன் மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முனியப்பனின் உறவினர்கள் சம் பந்தப்பட்ட தனியார் மருத் துவமனையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தும் போலீசார் சம்பவ இடத் துக்குசென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தசம்பவத்தினால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற் பட்டது.
- பாதிக்கப்பட்ட மக்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்
- 17-ந்தேதி அறிக்கை சமர்பிக்க காவல்துறைக்கு உத்தரவு
திருவண்ணாமலை:
வீரளூர் ஊராட்சியில் சுடுகாட்டு பாதைக்காக கலவரம் ஏற்பட்ட பகுதி யில் தமிழக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் ஐ.ஜி. பிர பாகரன் ஆய்வு செய் தார்.
கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட வீரளுர் ஊராட்சி யில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் மக்களுக்கும் மற்றும் ஊர் மக்களுக்கும் இடையே சுடுகாட்டு பாதை சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு பின்பு கலவரமாக மாறியது.
இது சம்பந்தமாக அப்பகுதி யில் ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகி யோர்பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.
அதன்பிறகு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த அருந்ததியர் மக்கள் கோரிக்கை வைத்தனர். இத னைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு, சி.என்.அண்ணா துரை எம்.பி., சரவணன் எம். எல்.ஏ. ஆகியோர் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக் களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரணம் வழங் குவதாக கூறினர். அதன் பிறகு ரூ.62 லட்சம் மதிப்பில் நிவா ரண உதவித் தொகை அரசு சார்பில் வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து தற் போது வீரளூர் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த மக்கள் சார்பில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட போது வழங் கப்பட்ட நிவாரண தொகை போதுமானதாக இல்லை எனவும், முறையாக அனைவ ருக்கும் வழங்கப்படவில்லை எனவும் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்து உள்ளனர். இதனையடுத்து கடந்த 4-ந்தேதி திருவண்ணா மலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வீரளூர் கிராமத் திற்கு நேரில் சென்று விசா ரணை நடத்தினார்.
இந்த நிலையில் வீரளூர் ஊராட்சியில் நடைபெற்ற கலவர சம்பவம் குறித்து ஆய் வறிக்கையும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து முழு அறிக்கையை வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்க மனித உரிமை ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.
அதனைதொடர்ந்து நேற்று தமிழக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் ஐ.ஜி. பிரபாகரன் வீரளூர் ஊராட்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கலவர சம்பவம் ஏற்படுவதற்கான சுடுகாட்டுப் பாதையை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து பாதிக் கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு விவ ரங்களை கேட்டறிந்தார். மேலும் நிவாரண உதவிகள் முழுமையாக வழங்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும். அவர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன் மற்றும் போலீசார் உடனிருந்தார்.
முன்னதாக திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரி மைகள் பிரிவு ஐ.ஜி., கலெக் டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுடன் ஆய்வு செய்தார்.
- ரூ.10,000 பெற்றுக்கொண்டு ஆடு மேய்க்க விட்ட அவலம்
- காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்
செங்கம்:
செங்கம் அருகே கொத்தடிமைகளாக வேலை பார்த்த 3 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
செங்கம் அருகே உள்ள அரியாக்குஞ்சூர் இருளர் காலனி பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் அவரது பிள்ளைகள் சிறுவர்களான 3 பேரை ரூ.10,000-த்திற்கு கொத்தடிமைகளாக அரட்டவாடி பகுதியை சேர்ந்த ஒருவரின் ஆடுகளை மேய்ப்பதற்காக விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட சைல்ட் லைனிற்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து குழந்தைகள் நல அலுவலர்கள் அப்பகுதியில் வந்து விசாரணை செய்தனர்.
அப்போது 3 சிறுவர்களும் அரட்டவாடி காட்டு பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறுவர்களை மீட்டு செங்கம் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் சிறுவர்களை திருவண்ணாமலை குழந்தைகள் நல காப்பகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
- 3 கால யாகபூஜை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் செப்டாங்குளம், மதுரா புதூர், திருநீர்மலை குன்றின் மீது புதியதாக வள்ளி தேவசேனா சமேத பாதாள சுப்ரமணியசாமி, கோவில் புதிதாக கட்டி பஞ்சவர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கோவிலின் முன்பு யாகசாலை பந்தல் அமைத்து.
5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 கலசம் வைத்து, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களை வைத்து. 3 காலையாக பூஜைகள் செய்தனர். பின்னர் புனித நீர் கலசங்களை மேளதாளம், பம்பை உடுக்கை அடித்து கோவிலை சுற்றி வந்து திருநீர்மலை குன்றின் மீது உள்ள பாதாள சுப்பிரமணியசாமி கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசங்கள் புனித நீரை ஊற்றினார்கள்.
சூரிய பகவானுக்கு கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டு. பிறகு அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் வள்ளி, தேவசேனா பாதாள சுப்பிரமணியசாமிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை 6 மணிக்கு பாதாள சுப்பிரமணியசாமி புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- இரவு காவலர், ஆட்டோ டிரைவர் கைது
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா அலுவலக குடோ னில் வைக்கப்பட்டிருந்த 11 மூட்டை இலவச வேட்டி-சேலை பண்டல் கள் காணாமல் போனதாக, இரவு காவலர் மற்றும் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
இலவச வேஷ்டி சேலை
திருவண்ணாமலை திண்டிவனம் ரோட்டில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் குடோன் உள்ளது. இங்கு பொதுமக் களுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி சேலைகள் மூட்டை, மூட்டையாக கட்டிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை போலீசார் கிரிவல பாதை அவலுார்பேட்டை ரோட்டில் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது மூட்டைகளுடன் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ஆட்டோ டிரைவர் மற்றும் உடன் இருந்த நபர் முன் னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை ஸ்டே சனுக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
அதில், ஆட்டோவில் இருந்த துணி மூட்டைகள் தாலுகா அலுவலக குடோ னில் இருந்து எடுத்து வந்த இலவச, வேட்டி, சேலைகள் என தெரியவந்தது. இதற் கிடையில், தலைமையி டத்து துணை தாசில்தார் ரமேஷ் கொடுத்துள்ள புகா ரில், தாலுகா அலுவலக குடோனில் இருந்து 11 மூட்டை துணிகள் காணா மல் போயுள்ளதாக குறிப் பிடப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து திருவண் ணாமலை கிழக்கு போலீ சார் வழக்கு பதிவு செய்து, வடஆண்டாப்பட்டு கிரா மத்தை சேர்ந்த தாலுகா அலுவலக இரவு காவலர் துவாரகேஷ் (28), அதே ஊரைசேர்ந்த ஆட்டோடிரைவர் பரசுராமன் (30) ஆகி யோரை கைது செய்தனர்.
- போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் நடவடிக்கை
- நோட்டீஸ் அளித்து காலஅவகாசம் அளித்தனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் கோட்டை மைதானம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுவதால் கோட்டை மைதானம் சுற்றியுள்ள அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி மற்றும் ஆரணி வருவாய் துறையினர் ஏற்கனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அளித்து காலஅவகாசம் வழங்கினார்கள்.
இதனையடுத்து நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தாசில்தார் ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் கோட்டை வீதி பேருந்து நிலையங்கள் செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள்.
ஆரணி முக்கிய வீதிகளான பேருந்து நிலையங்கள் மற்றும் கோட்டை வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- 10 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்தது
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜூலு. இவர் தனது குடும்பத்துடன் காரில் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து வந்தவாசி வழியாக காஞ்சிபுரத்துக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தார்.
கார் வந்தவாசி-திண்டிவனம் சாலையில், வந்தவாசி போக்குவரத்து பணிமனை அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தின் மீது மோதியது. இதைத் தொடர்ந்து சாலையோர 10 அடி ஆழ பள்ளத்தில் கார் புரண்டு கவிழ்ந்தது.
இதில் காரில் பயணம் செய்த 8 பேரில் 2 பெண்கள் மட்டும் காயமடைந்தனர்.
வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- வந்தவாசி அரசு பள்ளியில் பரிதாபம்
- மாணவர்கள், சக ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது
வந்தவாசி:
வந்தவாசி தேனருவி நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (56). இவர் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று மதியம் பள்ளி உணவு இடைவே ளையின்போது குருமூர்த்தி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து சக ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குருமூர்த்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆசிரியர் குருமூர்த்தி இறந்த சம்பவம் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காட்டுப் பன்றிகள் மீது மோதியதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அரசுப் பஸ் டிரைவர் பாலச்சந்தர். இவரது மனைவி ரேவதி (42). இவர் வந்தவாசி அடுத்த மழையூர் துணை அஞ்சலகத்தில் அஞ்சல் அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு நவநீதகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார்.
ரேவதி நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தில் பணி முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வந்தவாசி-சேத்பட் சாலை, பொன்னூர் மலை அருகே சென்றபோது சாலையின் குறுக்கே கூட்டமாக வந்த காட்டுப் பன்றிகள் மீது பைக் மோதியது. இதில் ரேவதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாலச்சந்தர் அளித்த புகாரின் பேரில் பொன்னூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- 12-ம் வகுப்பு படித்து வந்தார்
- போலீசார் விசாரணை
போளூர்:
கலசப்பாக்கம் அருகே உள்ள லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை மகன் செல்வா (வயது 18) செல்வா பக்கத்து கிராமத்தில் உள்ள 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை 1 ½ வருடமாக காதலித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு நாள் கல்லாங்குத்து பாறைக்கு காதலியை வரவைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் உடலில் மாற்றங்கள் தென்படவே, சிறுமியின் தாயார் உள்ளூர் நர்சு உதவியுடன் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சென்று பரிசோதனை செய்தனர்.
அங்கு டாக்டர் சிறுமியை பரிசோதனை செய்ததில் அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் கவிதா சப் -இன்ஸ்பெக்டர் மீனாட்சி அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
இதையெடுத்து வாலிபர் செல்வாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து செல்வா வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- திருட்டு கும்பல் துணிகரம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த உளுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(71). இவர் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.
அதிகாரி வீட்டில் கொள்ளை
சென்னையில் வசிக்கும் இவரது மகனை பார்ப்பதற்காக தனது மனைவியுடன் கடந்த வாரம் சென்னைக்கு சென்றார். பின்னர் நேற்று காலை ஊர் திரும்பினார். இவர், வீட்டை திறந்து உள்ளே சென்றார். அங்கு அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த54 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.
மர்ம நபர்கள் வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே குதித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணை
இது குறித்து சீனிவாசன் கீழ்க்கொ டுங்காலூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் துறையினர் வந்து அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் மியா கொண்டுவரப்பட்டு மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொள்ளை சம்பவம் குறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






