என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • நள்ளிரவில் ஏடிஎம் மையங்களின் சட்டர்களை மூடி கியாஸ் வெல்டிங் மூலம் மிஷின்கள் உடைக்கப்பட்டுள்ளன.
    • ஏடிஎம் எந்திரத்தை முழுமையாக கையாளத் தெரிந்தவர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர்.

    இந்த 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.72 லட்சம் பணம் கொள்ளை போனது.

    நள்ளிரவில் ஏடிஎம் மையங்களின் சட்டர்களை மூடி கியாஸ் வெல்டிங் மூலம் மிஷின்கள் உடைக்கப்பட்டுள்ளன. முன்னதாக அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை கியாஸ் வெல்டிங் மூலம் கும்பல் எரித்துள்ளனர். அதை தொடர்ந்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு ஏடிஎம் எந்திரங்களுக்கு தீ வைத்து சென்று விட்டனர்.

    ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க 13 நிமிடங்கள் மட்டுமே கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.

    போளூர் ஏ.டி.எம். மையம் அருகே உள்ள கேமராக்கைளை ஆய்வு செய்தபோது அதிகாலை 3.50 மணிக்கு காரில் தொப்பி அணிந்தபடி 4 பேர் கும்பல் வந்ததும் அடுத்த 13 நிமிடத்தில் அவர்கள் கொள்ளையை முடித்து விட்டு திரும்பி சென்றதும் பதிவாகி உள்ளது.

    அவர்கள் ஏடிஎம் கொள்ளையில் கைதேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் ஒரே நாளில் ஒரே விதமாக கொள்ளை நடந்திருப்பது போலீசாரை அதிர வைத்துள்ளது.

    கொள்ளை நடந்த ஏடிஎம் மையங்களை போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏடிஎம் எந்திரத்தை முழுமையாக கையாளத் தெரிந்தவர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பந்தமாக பல தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    கும்பலை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக ஆந்திராவுக்கு கும்பல் தப்பி செல்ல வாய்ப்பு உள்ளது.

    இதனை தொடர்ந்து ஆந்திர எல்லைகளில் போலீசார் நேற்று காலை முதல் விடிய விடிய சோதனை நடத்தினர். தொடர்ந்து சோதனை நீடித்து வருகிறது.

    இதேபோல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா கர்நாடக மாநில எல்லைகளில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    வேலூரில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் விடுதிகளில் தங்கியுள்ளனர். இன்று 2-வது நாளாக லாட்ஜிகளில் சோதனை நடத்தப்பட்டது.

    இது போன்ற கொள்ளையில் அனுபவம் வாய்ந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கும்பல்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை போளூர் கலசப்பாக்கம் நகர பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக டி.ஐ.ஜி முத்துசாமி கூறுகையில்:-

    கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றார்.

    • கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஒரு எந்திரத்தை மட்டும் வெல்டிங் எந்திரத்தால் வெட்டி அதில் இருந்த ரூ.32 லட்சத்தை கொள்ளையடித்து உள்ளனர்.
    • கொள்ளையர்கள் எதிரில் இருந்த மற்றொரு எந்திரத்தை எந்தவித கொள்ளை முயற்சியும் செய்யாமல் விட்டு விட்டு சென்று உள்ளனர்.

    திருவண்ணாமலை:

    கொள்ளை சம்பவம் நடைபெற்ற திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தேனிமலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் 2 வெவ்வேறு பணம் எடுக்கும் எந்திரங்கள் இருந்தன.

    கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஒரு எந்திரத்தை மட்டும் வெல்டிங் எந்திரத்தால் வெட்டி அதில் இருந்த ரூ.32 லட்சத்தை கொள்ளையடித்து உள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு எதிரில் இருந்த மற்றொரு எந்திரத்தை எந்தவித கொள்ளை முயற்சியும் செய்யாமல் விட்டு விட்டு சென்று உள்ளனர்.

    அதில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் எவ்வளவு பணம் அதில் இருந்தது என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    • உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாணாபுரம்:

    தண்டராம்பட்டு அருகே உள்ள தரடாபட்டு பகுதி யைச் சேர்ந்தவர் சேகர். இவ ரது மனைவி செல்வி (வயது 40). இவரும் உறவினர்களான குமார் மற்றும் மாரியம்மாள் ஆகிய 3 பேரும் வரகூரில் உள்ள உறவினரின் விசேஷத்திற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை குமார் ஓட்டினார்.

    வாணாபுரத்தில் இருந்து தண்டராம்பட்டு நோக்கி கூடலூர் அருகே வந்தபோது கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் செல்விபடுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினையால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா. இவருக்கும் செய்யாறு தாலுகா தூசி அருகே கூழ மந்தல் கிராமம் சிவப்பிரகாசம் நகர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி பாலமுருகன் என்பவருக் கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

    இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பாலமுருகன் 2 நாட்க ளாக வீட்டில் பேசாமல் இருந்துள் ளார். நேற்று முன்தினம் ரஞ்சிதா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலை யில் தூக்கில் தொங்கியபடி பாலமுரு கன் ரஞ்சிதாவுக்கு செல்போனில் படம் அனுப்பி உள்ளார். இதை கண்ட ரஞ்சிதா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் உறவி னர்களுக்கு போன் செய்து உடனே வீட்டிற்கு சென்று பார்க் கும்படி கூறினார். அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கியபடி இருந்த பாலமுருகனை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரஞ்சிதா தூசி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினர்
    • 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அ ருண்லால் உத்தரவின் பேரில் போளூர் வனச்சரக அலுவலர் குமார் தலைமையில், வனவர்கள் சிவகுமார், சந்திர சேகரன் மற்றும் வனக்காப்பா ளர்கள் அல்லியாளமங்கலம் காப்புக்காடு, அல்லிக்கட்டை சரகத்தில் காடு ஆகிய பகுதி களில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காட்டில் பெண் புள்ளிமானை, நாட்டு துப் பாக்கி மூலம் வேட்டையாடி, அதனை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்ற 3 வாலி பர்களை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் ரோந்து பணி தேவிகாபுரத்தை சேர்ந்த சிவா (வயது 27), போளூரை சேர்ந்த சாம்சன் (26), கிளியனூரை சேர்ந்த அரி (25) என்பது தெரிய வந்தது.

    இதை யடுத்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 நாட்டு துப்பாக்கிகள், ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வேட்டையாடப்பட்ட மானை கால் நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து காட்டில் புதைத்தனர்.

    • இன்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி மலர்க்கொடி. இவர்களுக்கு சரவணன், குகன் (வயது 27), என்ற மகன்களும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

    சரவணனுக்கும், ஜெயலட்சுமிக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். குகன் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். குகனுக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் இன்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இதற்காக நேற்று குகன் ஆற்காட்டில் உள்ள உறவினர்களுக்கு சொல்ல தனது பைக் மூலம் ஆற்காட்டிற்கு சென்றார்.

    பின்னர் ஆற்காட்டில் இருந்து ஆரணிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது போளூர் பைபாஸ் சாலையில் வரும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் குகன் ஓட்டி பைக் மீது மோதியது. இதில் வாலிபர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த குகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஆரணி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து குகனை மோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அதிலேயே தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    சென்னை பெரம்பூரில் கடந்த 9-ந்தேதி நள்ளிரவில் நகைக்கடையை உடைத்து 9 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கியாஸ் வெல்டிங் மூலமாக நகை கடையின் இரும்பு ஷட்டரை சத்தமில்லாமல் உடைத்த கொள்ளை கும்பல் மிகவும் துணிச்சலாக கை வரிசை காட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.

    இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம் கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    வடசென்னை கூடுதல் கமிஷனர் அன்பு மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் கொள்ளை சம்பவத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமலேயே உள்ளது. இதனால் வடசென்னை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

    இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவண்ணாமலையில் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் பகுதியில் தேனிமலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாரியம்மன் கோவில் தெரு ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்று நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் கியாஸ் வெல்டிங் மூலமாக எந்திரத்தை உடைத்தனர்.

    பின்னர் அதில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து மூட்டை கட்டினர். இதையடுத்து தேனிமலை பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்ற கொள்ளை கும்பல் இதே பாணியில் அங்கும் கைவரிசை காட்டியது.

    கியாஸ் வெல்டிங் மூலமாக எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த ரூ.30 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்தனர். இதன் பின்னர் கொள்ளை கும்பல் வேலூர் நோக்கி பயணத்தை தொடர்ந்தது.

    திருவண்ணாமலையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள கலசப்பாக்கத்துக்கு கொள்ளையர்கள் சென்றனர். கலசப்பாக்கம் மெயின் ரோட்டில் 'இண்டியா ஒண்' வங்கி ஏ.டி.எம். மையத்தில் புகுந்த கொள்ளையர்கள் எந்திரத்தை உடைத்து ரூ.5 லட்சம் பணத்தை சுருட்டினர்.

    இதன்பிறகு போளூர் சென்ற கொள்ளையர்கள் அங்கு மீண்டும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைத்தனர். அதிலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. போளூர் ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

    மொத்தம் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்த கொள்ளையர்கள் ரூ.75 லட்சம் பணத்தை மிகவும் துணிச்சலாக வாரி சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரேநாள் இரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையர்கள் சாவகாசமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். திருவண்ணாமலை போலீசுக்கு சவால் விடுக்கும் வகையில் மர்ம கொள்ளை கும்பல் கைவரிசை காட்டிவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளது.

    கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அதிலேயே தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக கொள்ளையர்கள் ஆந்திர மாநிலத்துக்கு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ஆந்திரா அல்லது வடமாநிலங்களை சேர்ந்த கொள்ளையர்கள் தான் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கொள்ளை கும்பலை உடனடியாக கூண்டோடு பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகிய இருவரின் மேற்பார்வையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை சல்லடை போட்டு தேடி வருகிறார்கள். கொள்ளைபோன 4 ஏ.டி.எம்.களில் 3 ஏ.டி.எம்.கள் 'ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா' வங்கிக்கு சொந்தமானவையாகும். ஒருவங்கி கிராமப்பகுதிகளில் அதிகமாக உள்ள 'இண்டியா ஒன்' ஏ.டி.எம். ஆகும்.

    இந்த 4 ஏ.டி.எம். மையங்களிலும் காவலாளிகள் இல்லை. இது கொள்ளையர்களுக்கு வசதியாக போய் விட்டது. ஏ.டி.எம். மையங்களில் உள்ள கேமரா மற்றும் கேமரா காட்சிகள் பதிவாகும் ஐ.வி.ஆர். பெட்டி ஆகியவற்றை கொள்ளையர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

    பின்னர் ஐ.வி.ஆர். பதிவான பெட்டியை தீவைத்து எரித்து தடயங்களை அழித்துள்ளனர். இதனால் கொள்ளையர்கள் எப்படி இருப்பார்கள்? என்பதை கூட போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

    இருப்பினும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் ஆந்திர எல்லையோர பகுதிகளிலும் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலுமே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

    • 3 பேர் காயம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தேகப்படாராணிபாளை யத்தை சேர்ந்தவர் பாஸ்கர்ராஜ் (வயது 50). இவரது மனைவி கிருஷ்ணவேணி (48), மகன் தேக ராம் (29), இவரது மனைவி மானஷா (24). இவர்கள் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றனர். தனராம் (27) என்பவர் காரை ஒட்டினார். சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர்.

    கண்ணமங்கலம் அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் தன்ராம் வலதுபுறமாக காரை திருப்பினார். அப்போது கட்டுப் பாட்டை இழந்த கார் சாலையோரம் பழக்கடையின் அருகில் மோட்டார் சைக்கிளில் நின்று பேசிக் கொண்டிருந்த வாலிபர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் கார் டிரைவர் தன்ராம், பழக்கடை வைத்துள்ள பாபு, மோட்டார் சைக்கிளில் நின்ற வாலிபர் உள்பட மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தரணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் அருகே கண்ணக்கந்தல் கிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் பூபாலன் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ரோஜா. இவர்களுக்கு நந்திதா (6) என்ற மகளும், ஹரிதாஸ் (4), சரத் (1½) ஆகிய மகன்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று எதிர் வீட்டில் பூபாலன் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். பகல் 1 மணி அளவில் மனைவியை அழைத்து வீட்டு குடிநீர் தொட்டியில் தண்ணீர் உள்ளதா என பார்க்க சொன்னதாக தெரிகிறது.

    இதையடுத்து ரோஜா குடிநீர் தொட்டியின் மேல் இருந்த இரும்பு மூடியை திறந்து பார்த்து தண்ணீா் இருக்கிறது என கூறிவிட்டு வீட்டு வேலைகளை பார்க்க சென்றார்.

    சிறிது நேரம் கழித்து சிறுவன் ஹரிதா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். பின்னர் திறந்திருந்த குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து மூழ்கி கிடந்தது. தெரியவந்தது. உடனடியாக சிறுவனை தூக்கி கொண்டு தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டா்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பூபாலன் தண்டராம்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துண்டு பிரசுரங்கள் வழங்கினர்
    • விழிப்புணர்வு பேரணி நடந்தது

    கீழ்பென்னாத்தூர்:

    தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். கால் நடை மருத்துவர் பேபி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக கீழ் பென்னாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கலந்துகொண்டு வெறி நோய் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.

    இதில் மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம், உதவி இயக்குனர் ஜெயக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் ஆகியோர் திட்ட விளக்க உரையாற்றினார்கள்.

    கால்நடை மருத்துவர்கள் ராஜ்குமார், கவிதா, கோகிலா ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய் தடுப்பூசி போட்டனர்.

    இதில் டாக்டர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி கீழ்பென்னாத்தூர் நகரின் முக்கிய வீதிகள் வழியே நடந்தது.

    • மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசம்
    • மலைப்பகுதியை பாதுகாக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1440 அடி உயரத்தில் ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை உள்ளது.

    பக்தர்கள் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வது வழக்கம். மேலும் கார்த்திகை தீபத்தன்று வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்கள் மலை மீது ஏறி ஸ்ரீ தவளகிரீஸ்வரரை தரிசனம் செய்கின்றனர்.

    இந்த நிலையில் மர்ம கும்பல் சிலர் மலையில் தீ வைத்துள்ளனர். இதனால் மலையின் ஒரு பகுதி மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

    மலையில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் தீயில் எரிந்து கருகியது. தவளகிரீஸ்வரர் மலை மீது மர்ம கும்பல் தீ வைப்பது தொடர் கதையாக நவருகிறது.

    அரியவகை மூலிகை செடிகள் மரங்கள் அதிகமாக இருக்கும் இந்த மலையை வனத்துறை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் பாதுகாக்கா மல் தொடர்ந்து அலட்சியமாக இருந்ததால் மர்ம கும்பல் மலை மீது தீ வைத்துள்தாக கூறப்படுகிறது.

    இனிவரும் காலங்களில் வனத்துறை அதிகாரிகள் மூலிகைச் செடிகள் நிறைந்த இந்த மலைப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    • வகுப்பறையில் செல்போனை பயன்படுத்தியதால் தகராறு
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அருகே உள்ள ஆதமங்கலம் புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செங்கம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 48) என்பவர் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இதே பள்ளியில் கலசபாக்கம் அடுத்த நவாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (38) என்பவர் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் என்பவர் கடந்த 7 மற்றும் 8 தேதிகளில் விடுமுறையில் சென்றிருந்த காரணத்தால் அந்த பொறுப்பை உதவித் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 8-ந் தேதி உதவி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் பள்ளி வகுப்பறையில் ஆய்வு மேற்கெண்ட போது பச்சையப்பன் வகுப்பு நேரத்தில் செல்போனை பயன்படுத்தியதாக தெரிகிறது.

    இது பற்றி அப்போது அவரிடம் எதுவும் பேசாமல் சென்று விட்டு மறுநாள் காலையில் நடைபெற்ற இறை வணக்கம் கூட்டத்தின் போது உதவி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் பள்ளியில் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் யாரும் வகுப்பு நேரங்களில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளார்.

    இதையடுத்து நேற்று விடுமுறை முடித்துவிட்டு பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் சீனிவாசனிடம் பச்சையப்பன் தன்னை மாணவர்கள் மத்தியில் செல்போன் பயன்படுத்துவதை குறிப்பிட்டு பேசி அசிங்கப்படுத்தி உள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

    அப்போது அங்கிருந்த ஆறுமுகம், பச்சையப்பன் இருவருக்கும் தலைமை ஆசிரியர் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த பச்சையப்பன் தலைமையாசிரியர் வகுப்பறையில் இருந்த நாற்காலியை எடுத்து ஆறுமுகத்தின் மீது தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    இதில் ஆறுமுகத்துக்கு காயம் ஏற்பட்டு கலசப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

    இது சம்பந்தமாக ஆறுமுகம் கடலாடி போலீசில் புகார் செய்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×