என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலவச வெறிநாய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
- துண்டு பிரசுரங்கள் வழங்கினர்
- விழிப்புணர்வு பேரணி நடந்தது
கீழ்பென்னாத்தூர்:
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். கால் நடை மருத்துவர் பேபி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கீழ் பென்னாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கலந்துகொண்டு வெறி நோய் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.
இதில் மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம், உதவி இயக்குனர் ஜெயக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் ஆகியோர் திட்ட விளக்க உரையாற்றினார்கள்.
கால்நடை மருத்துவர்கள் ராஜ்குமார், கவிதா, கோகிலா ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய் தடுப்பூசி போட்டனர்.
இதில் டாக்டர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி கீழ்பென்னாத்தூர் நகரின் முக்கிய வீதிகள் வழியே நடந்தது.






