என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலையில் தீ விபத்து"

    • மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசம்
    • மலைப்பகுதியை பாதுகாக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1440 அடி உயரத்தில் ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை உள்ளது.

    பக்தர்கள் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வது வழக்கம். மேலும் கார்த்திகை தீபத்தன்று வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்கள் மலை மீது ஏறி ஸ்ரீ தவளகிரீஸ்வரரை தரிசனம் செய்கின்றனர்.

    இந்த நிலையில் மர்ம கும்பல் சிலர் மலையில் தீ வைத்துள்ளனர். இதனால் மலையின் ஒரு பகுதி மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

    மலையில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் தீயில் எரிந்து கருகியது. தவளகிரீஸ்வரர் மலை மீது மர்ம கும்பல் தீ வைப்பது தொடர் கதையாக நவருகிறது.

    அரியவகை மூலிகை செடிகள் மரங்கள் அதிகமாக இருக்கும் இந்த மலையை வனத்துறை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் பாதுகாக்கா மல் தொடர்ந்து அலட்சியமாக இருந்ததால் மர்ம கும்பல் மலை மீது தீ வைத்துள்தாக கூறப்படுகிறது.

    இனிவரும் காலங்களில் வனத்துறை அதிகாரிகள் மூலிகைச் செடிகள் நிறைந்த இந்த மலைப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    • மரங்கள் எரிந்து நாசம்
    • வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையடிவார பகுதி களில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு, புகை பிடித்து தீயை அணைக்காமல் போட்டு விடுவதால் சருகுகள் மூலம் பெரிய அளவில் தீப்பற்றி எரிகிறது. கடந்த மாதத்தில் ஏலகிரி மலையில் 5 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மர்ம நபர்கள் நேற்று மாலை காட்டுக்கு தீ வைத்து சென்றுள்ளனர்.இதில் மலையின் உச்சி பகுதிவரை தீ பரவியது. 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள், வன விலங்குகள் தீயில் பாதிக்கப்பட்டன.

    மேலும் ஊசி நாட்டான் வட்டம் சந்தைக்கோடியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகளின் மிகவும் மேற்கூரையில் சாம்பல் விழுகிறது. இதனால் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபடும் மர்ம கும்பலை வனத்துறையினர் கண்காணித்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×