என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மீது வாகனம் மோதி நிதி நிறுவன அதிபர் பலி
    X

    பைக் மீது வாகனம் மோதி நிதி நிறுவன அதிபர் பலி

    • இன்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி மலர்க்கொடி. இவர்களுக்கு சரவணன், குகன் (வயது 27), என்ற மகன்களும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

    சரவணனுக்கும், ஜெயலட்சுமிக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். குகன் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். குகனுக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் இன்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இதற்காக நேற்று குகன் ஆற்காட்டில் உள்ள உறவினர்களுக்கு சொல்ல தனது பைக் மூலம் ஆற்காட்டிற்கு சென்றார்.

    பின்னர் ஆற்காட்டில் இருந்து ஆரணிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது போளூர் பைபாஸ் சாலையில் வரும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் குகன் ஓட்டி பைக் மீது மோதியது. இதில் வாலிபர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த குகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஆரணி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து குகனை மோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×