என் மலர்
நீங்கள் தேடியது "சுடுகாட்டு பாதை சம்பந்தமாக பிரச்சினை"
- பாதிக்கப்பட்ட மக்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்
- 17-ந்தேதி அறிக்கை சமர்பிக்க காவல்துறைக்கு உத்தரவு
திருவண்ணாமலை:
வீரளூர் ஊராட்சியில் சுடுகாட்டு பாதைக்காக கலவரம் ஏற்பட்ட பகுதி யில் தமிழக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் ஐ.ஜி. பிர பாகரன் ஆய்வு செய் தார்.
கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட வீரளுர் ஊராட்சி யில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் மக்களுக்கும் மற்றும் ஊர் மக்களுக்கும் இடையே சுடுகாட்டு பாதை சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு பின்பு கலவரமாக மாறியது.
இது சம்பந்தமாக அப்பகுதி யில் ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகி யோர்பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.
அதன்பிறகு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த அருந்ததியர் மக்கள் கோரிக்கை வைத்தனர். இத னைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு, சி.என்.அண்ணா துரை எம்.பி., சரவணன் எம். எல்.ஏ. ஆகியோர் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக் களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரணம் வழங் குவதாக கூறினர். அதன் பிறகு ரூ.62 லட்சம் மதிப்பில் நிவா ரண உதவித் தொகை அரசு சார்பில் வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து தற் போது வீரளூர் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த மக்கள் சார்பில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட போது வழங் கப்பட்ட நிவாரண தொகை போதுமானதாக இல்லை எனவும், முறையாக அனைவ ருக்கும் வழங்கப்படவில்லை எனவும் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்து உள்ளனர். இதனையடுத்து கடந்த 4-ந்தேதி திருவண்ணா மலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வீரளூர் கிராமத் திற்கு நேரில் சென்று விசா ரணை நடத்தினார்.
இந்த நிலையில் வீரளூர் ஊராட்சியில் நடைபெற்ற கலவர சம்பவம் குறித்து ஆய் வறிக்கையும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து முழு அறிக்கையை வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்க மனித உரிமை ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.
அதனைதொடர்ந்து நேற்று தமிழக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் ஐ.ஜி. பிரபாகரன் வீரளூர் ஊராட்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கலவர சம்பவம் ஏற்படுவதற்கான சுடுகாட்டுப் பாதையை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து பாதிக் கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு விவ ரங்களை கேட்டறிந்தார். மேலும் நிவாரண உதவிகள் முழுமையாக வழங்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும். அவர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன் மற்றும் போலீசார் உடனிருந்தார்.
முன்னதாக திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரி மைகள் பிரிவு ஐ.ஜி., கலெக் டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுடன் ஆய்வு செய்தார்.






