என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீடு், ஓடுகள் பிரித்து கிடப்பதை படத்தில் காணலாம்.
அதிகாரி வீட்டின் ஓட்டை பிரித்து 54 பவுன் நகை கொள்ளை
- திருட்டு கும்பல் துணிகரம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த உளுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(71). இவர் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.
அதிகாரி வீட்டில் கொள்ளை
சென்னையில் வசிக்கும் இவரது மகனை பார்ப்பதற்காக தனது மனைவியுடன் கடந்த வாரம் சென்னைக்கு சென்றார். பின்னர் நேற்று காலை ஊர் திரும்பினார். இவர், வீட்டை திறந்து உள்ளே சென்றார். அங்கு அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த54 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.
மர்ம நபர்கள் வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே குதித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணை
இது குறித்து சீனிவாசன் கீழ்க்கொ டுங்காலூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் துறையினர் வந்து அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் மியா கொண்டுவரப்பட்டு மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொள்ளை சம்பவம் குறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






