ஆசிரியர் திடீரென மயங்கி விழுந்து சாவு

வந்தவாசி அரசு பள்ளியில் பரிதாபம்மாணவர்கள், சக ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது
ஆசிரியர் திடீரென மயங்கி விழுந்து சாவு
Published on

வந்தவாசி:

வந்தவாசி தேனருவி நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (56). இவர் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று மதியம் பள்ளி உணவு இடைவே ளையின்போது குருமூர்த்தி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து சக ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குருமூர்த்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆசிரியர் குருமூர்த்தி இறந்த சம்பவம் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com