என் மலர்
நீங்கள் தேடியது "தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது."
- திருவண்ணாமலை ேகார்ட்டு தீர்ப்பு
- ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கினார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் கந்தன். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இவர், கடந்த 2010-ம் ஆண்டு தமிழக அரசின் சிவகாமி அம்மையார் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சலுகை பெற வேண்டி அனைத்து ஆவணங்களுடன் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அந்த சமயத்தில் ஊரக வளர்ச்சி அலுவலராக இருந்த முனியம்மாள் என்பவர் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அனுப்புவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சமாக பெற்றார். அவரை திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஈஸ்வரமூர்த்தி லஞ்சம் வாங்கிய முனியம்மாளுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.






