என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு சங்க கூட்டமைப்பினர் போராட்டம்
    X

    சத்துணவு சங்க கூட்டமைப்பினர் போராட்டம்

    • போளூர் ஒன்றியத்தின் சார்பில் நடந்தது
    • மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.6,750 வழங்க வலியுறுத்தல்

    போளூர்:

    தமிழ்நாடு சத்துணவு சங்கங்களின் கூட்டமைப்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போளூர் தாலுகா அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இணை செயலாளர் கவுஸ் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் அனைத்து துறை ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றினார்.

    வட்டத் தலைவர் அபுல்கான் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகநாதன் செல்வி சுசீலா, அபிதா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உழியர்களுக்கு அகவிலைப்படி உடன் ரூபாய் 6750/ மாதாந்திர ஓய்வூதியமாக வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி திட்டத்தில் பணிபுரியும் உழியர்கள் 50% அரசு பணியில் காலியிடங்களில் பணிமூப்பு படிப்பில் பதவி உயர்வு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஏற்படுத்தினர்.

    முடிவில் மாவட்ட இணை செயலாளர் அம்பிகா நன்றி கூறினார்.

    Next Story
    ×