என் மலர்
நீங்கள் தேடியது "Nutrient Union struggle"
- போளூர் ஒன்றியத்தின் சார்பில் நடந்தது
- மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.6,750 வழங்க வலியுறுத்தல்
போளூர்:
தமிழ்நாடு சத்துணவு சங்கங்களின் கூட்டமைப்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போளூர் தாலுகா அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இணை செயலாளர் கவுஸ் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் அனைத்து துறை ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றினார்.
வட்டத் தலைவர் அபுல்கான் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகநாதன் செல்வி சுசீலா, அபிதா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உழியர்களுக்கு அகவிலைப்படி உடன் ரூபாய் 6750/ மாதாந்திர ஓய்வூதியமாக வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி திட்டத்தில் பணிபுரியும் உழியர்கள் 50% அரசு பணியில் காலியிடங்களில் பணிமூப்பு படிப்பில் பதவி உயர்வு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஏற்படுத்தினர்.
முடிவில் மாவட்ட இணை செயலாளர் அம்பிகா நன்றி கூறினார்.
- விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
- கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன்வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் மாநில அரசு நிதி பங்களிப்புடன் கூடிய பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் 2021-22 கீழ் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்யும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் இதற்கு 3 சென்ட் நிலம் போதுமானது.
சொந்தமாக நிலம் உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் திட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும் திட்ட செலவின தொகை ரூ.7,50,000-ல் பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 40 சதவீத மானியம் ரூ.3 இலட்சம் மானியம் வழங்கப்படும்.
பட்டியல் பிரிவினர்களுக்கு 60 சதவீத மானியம் ரூ.4.50 லட்சம் மானியம் வழங்கப்படும். மேற்கண்ட திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் இத்திட்டத்தில் இம்மாவட்ட இலக்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படுமாயின் பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், வேலூர் அலுவலகத்தை (எண்.16, 5 வது மேற்கு குறுக்கு தெரு, காந்திநகர், காட்பாடி, வேலூர் -632006 (அலுவலக தொலைபேசி எண். 0416 2240329, அலைபேசி எண். 9384824248, மின்னஞ்சல் adfifvellore1@gmail.com) தொடர்பு பெற்று விண்ணப்பிக்குமாறு திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.






