என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Take care and fine credit"

    • நேர்த்திக்கடன் செலுத்தினர்
    • செங்கம் தொரப்பாடி மாரியம்மன் கோவிலில் தைப்பூச விழா நடந்தது

    செங்கம்:

    செங்கம் அடுத்த தொரப்பாடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு முருகனுக்கு மாலை அணிந்து பக்தர்கள் அலகு குத்தியும், தேர் இழுத்து, கொதிக்கும் எண்ணெயில் வடை எடுத்தும் முல்படுகையில் நடந்தும் படுத்தும், மார்பின் மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தும் அந்தரத்தில் தொங்கியவாறு சென்று முருகன், மாரியம்மனுக்கு மாலை அணிவித்தும் தீபாராதனை செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    செங்கம் சுற்றுவட்ட பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகர் மற்றும் மாரியம்மனை தரிசித்தனர்.

    ×