என் மலர்
திருவண்ணாமலை
- போலீசார் பேச்சுவார்த்தை
- சுழற்சி முறையில் வேலை வழங்கப்படும் என உறுதி
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையத்தில் 100 நாள் திட்ட சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சிமன்றதலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு வந்த அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் 100 நாள் திட்டபணி யாளர்கள், தங்களுக்கு 100 நாள் வேலை சரிவர வழங்க வில்லை என்று கூறினர்.
மேலும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 100 நாள் வேலை சரிவர வழங்காததை கண்டித்து அவ்வூர் வழியாக செல்லும் வேலூர் - ஆரணி மெயின்ரோடு மேட்டுக்குடி கூட்ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாசில்தார் ஜெகதீ சன், வட்டார வளர்ச்சி அலுவலர் சவீதா, கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இனிவரும் காலங்களில் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக வாகனங்கள் மாற்றுப்பாதை யில் திருப்பி விடப்பட்டது.
- போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
- மாணவியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட வழக்கில் தண்டனை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாணவியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கூலி தொழிலாளி
தண்டராம்பட்டு தாலுகா மலைமஞ்சனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 24). இவர் சென்னையில் கூலி தொழில் செய்து வந்தார். இவருடன் திருவண்ணாமலை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் வேலை செய்து வந்தார். ஆனந்தகுமார் திருவண்ணாமலையில் உள்ள அந்த நபரின் வீட்டிற்கு வரும் போது அவரது 15 வயது 10-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த மகளுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
பின்னர் அவர் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி வலுகட்டாயமாக கடந்த சென்னைக்கு அழைத்து சென்று உள்ளார்.
அங்கு அவர் மாணவியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையில் மாணவியை காணவில்லை என்று அவரது பெற்றோர் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான மாணவி சென்னையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மாணவியை மீட்டனர். மேலும் ஆனந்தகுமாரை கைது செய்தனர்.
கோர்ட்டு தீர்ப்பு
இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கில் மைதிலி ஆஜரானார். இந்த நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்து நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தகுமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். பின்னர் ஆனந்தகுமாரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- மர்ம கும்பல் கைவரிசை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன் திருவத்தூரில் கிழக்கு மாடவீதியில் மூர்த்தி விக்னேஷ்வர் கோவில் அமைந்துள்ளது.
நேற்று இரவு இந்த கோவிலின் கேட்டை உடைத்து மர்ம கும்பல் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்துள்ளனர். பின்னர் அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை திருடி சென்றனர்.
மேலும் அதே பகுதியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவில், வலம்புரி விநாயகர் கோவில்களில் திருட முயன்றுள்ளனர். இது குறித்து செய்யாறு போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செய்யாறில் விபத்தில் பெண் பலி
- பஸ் கோர்ட்டில் ஒப்படைப்பு
செய்யாறு:
செய்யாறு தாலுகா அனக்காவூர் கிராமம் பிராமணர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி, வனஜா, கூலித் தொழிலாளி இவர் கடந்த 11.4.2008 அன்று வேலைக்குச் சென்று விட்டு பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக் கொண்டு இருந்தார்.
ஞான முருகன்பூண்டி கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த வனஜா செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து செய்யாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், விபத்தில் இறந்த வனஜாவின் கணவர் முருகன் மற்றும் மகன் ராஜசேகர், மகள்கள் விஜயசாந்தி சுமதி ஆகியோர் நஷ்டஈடு வழங்கக்கோரி செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி மனுதாரர்க ளுக்கு விபத்துக்கு நஷ்டஈடாக ரூ.13 லட்சத்து 14 ஆயிரம் வழங்க வேண்டும் என்று 25.3.19 அன்று உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மனு தாரர்கள் தரப்பில் சார்பு நீதி மன்றத்தில் நஷ்டஈடுத் தொகையை வழங்க நிறை வேற்று மனுவைத் தாக்கல் செய்தனர்.
அதன்பேரில் அசலும் வட்டியும் சேர்த்து ரூ. 27 லட்சத்து 34 ஆயிரத்து 335-ஐ. மனுதாரர் குடும்பத்திற்கு அரசுபோக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் சார்பு நீதிபதி குமாரவர்மன் உத்தரவிட்டார்.
ஆனால் போக்குவரத்துக் கழகத்தினர் நஷ்டஈடுத் தொகை வழங்காததால் நேற்று மதியம் செய்யாறு பஸ் நிலையத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து சேலம் செல்லஇருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
- திருவண்ணாமலையில் பலத்த மழை
- போக்குவரத்து பாதிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது.
இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்து வந்தனர். கடந்த ஓரிரு தினங்களாக மாவட்டத்தில் அநேக பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. மதியம் சுமார் 3.30 மணியளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் திடீரென்று பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் பைக், காரில் சென்றவர்கள் சாலையோரம் ஒதுங்கி சென்றனர். இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இந்த மழை நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் நின்றது. அப்போது போளூர் செல்லும் சாலையில் வெள்ளப்பெருக்கெடுத்து சாலையோரம் நின்று இருந்த வாகனங்கள் மற்றும் காய்கறி கடைகள் அனைத்தும் முழுகடித்து சென்றன.
இதனால் பள்ளி மாணவர்களும் சாலையில் ஒரே நேரத்தில் சென்றதால் திருவண்ணாமலை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த பலத்த மழையினால் சுமார் 2 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. சில இடங்களில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டுகள் சரிந்து விழுந்து கிடந்தது. மேலும் திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் கிளிப்பட்டு அருகே சாலையோரம் இருந்த புளிய மரம் சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனை போலீசார் சீர் செய்தனர்.
- பாஜக.வை கண்டித்து கோஷம் எழுப்பினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்திக்கு எதிராக 2019- ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இதை தொடர்ந்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது மோடி அரசை கண்டித்தும், பாஜக.வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் குணசேகரன், சுப்பிரமணி, காமராஜ், ராஜு உள்பட தொண்டர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணியில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜா பாபு மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் மாவட்ட துணை தலைவர் சாந்தகுமார் நகர பொருளாளர் பிள்ளையார் நிர்வாகிகள் பாபு சம்மந்தம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
- தாய் கண்டித்ததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அருகே அன்மருதை கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரி இளங்கோ ஜோதி தம்பதியினருக்கு திவாகர் (வயது 15) என்ற மகனும் ஹரிபிரியா என்ற மகளும் உள்ளனர்.
திவாகர் அன்மருதை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று செலவிற்கு திவாகர் வீட்டில் பணத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை திவாகரின் தாயாார் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த திவாகர் வீட்டில் பின்புறத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தான்.
அக்கம் பக்கத்தினர் திவாகரனை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் திவாகர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பெரணமல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து திவாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பெங்களூரை சேர்ந்தவர்
- காதலியிடம் தீவிர விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக் கப்பட்டனர்.
அரசு விடு முறை தினம் என்பதால், வழக்கத்தைவிட பக்தர் கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. எனவே, ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், தெற்கு கோபுரம் வாசல் வழியாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தெற்கு கோபுரம் எனப்படும் திரு மஞ்சன கோபுரம் வழி யாக கோவிலுக்குள் ஒரு இளம்பெண்ணுடன் வந்த வாலிபர், சிறிது நேரம் அங்கும் இங்குமாக சுற்றித்தி ரிந்தார். மதுபோதையில் இருந்த அந்த வாலிபரின் கையில் கத்தி இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சிய டைந்தனர்.
மேலும், திடீரென கோவில் 4-ம் பிரகாரத்தில் உள்ள இணை ஆணையரின் நிர்வாக அலுவலகத் துக்குள் நுழைந்து ரகளை யில் ஈடுபட்டார்.
மேலும், அலுவலக கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார், அதோடு, அலுவலக அறைக்குள் நுழைந்த அந்த வாலிபர், ஆணையரின் இருக்கையில் அமர்ந்து கொண்டார். அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்த வாலிபரின் அதிரடி யால் அங்கிருந்த ஊழியர் கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர்.
ஆனால், கத்தியை காட்டி மிரட்டியபடி நிர்வாக அலுவலகத்துக்கு அருகே உள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளி கட்டிடத்துக்குள் நுழைந்தார். அங்கிருந்த சுவற்றின் மீது ஏறி, பயிற்சிபள்ளியின் மேற்கூரையை உடைந்து உள்ளே குதித்து, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினார்.
இது குறித்த தகவல் பரவியதும், போலீசார் விரைந்து வந்தனர். கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களின் உதவி யுடன் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
பின்னர், கைகளை யும், கால்களையும் கட்டி னர். அதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசார ணையில், பெங்களூரு காவல்பை சந்திரா தொட்டா நகரை ச்சேர்ந்த பிரேம்குமார் மகன் பிரத்தம் (வயது 23) என்பது தெரியவந் தது.
மேலும், அந்த வாலிப ருடன் வந்த இளம்பெண் பெங்களூரு நிக்சல்பாக் தேவி ரோடு பகுதியை சேர்ந்த ஜெனிபர் (21) என்ப தும், இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்த தும் விசாரணையில் தெரி யவந்துள்ளது.
மேலும், ஜெனிபரிடம் நடத்திய விசாரணையில், 'பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு பைக்கில் வரும் வழியில், இரண்டு பைக்கிலும், ஒரு காரிலும் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சிலர், எங்களை தாக்க முயன்றனர்.
மயக்க மருந்து போன்ற ஸ்பிரே அடித்த னர். எனவே, அவர்களி டம் இருந்து தப்பிக்கவே. கோவிலுக்குள் வந்தோம்' என்றார். ஆனால், அவர் முன்னுக்குப் பின் முர ணாக தெரிவித்த பதில் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
எனவே, இருவரும் தெரிவித்த முகவரிக்கு நேரில் சென்று, அவர் களுடைய பின்னணியை முழுமையாக விசாரிக்க போலீசார் முடிவு செய் துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக, கோவில் நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வாலிபர் பிரத்தத்தை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப் பையும் ஏற்படுத்தியது.
- பீரோவை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே உள்ள பறையம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுவேதா (வயது 22).
இவர் தனது மாமனார், மாமியாருடன் பறையம்பட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுவேதா, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு நகைகள் ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தனர்.
ஆனால் நகைகள் ஏதும் பீரோவில் இல்லை. இதனையடுத்து பக்கத்து அறையில் படுத்திருந்த சுவேதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த சுவேதா கூச்சலிட்டார்.
உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இது குறித்து தச்சம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் பீரோவில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- பக்தர்கள் மடக்கி பிடித்தனர்
- போலீசில் விசாரணை
திருவண்ணாமலை:
தச்சம்பட்டு அருகே உள்ள அயல் ரெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது.
அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 52) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென அம்மன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை திருடிக்கொண்டு ஓடினார். இதனை கண்ட அங்கிருந்த பக்தர்கள் அவரை மடக்கி பிடித்து தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் கருவட்டாம்பாறை பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (வயது 22) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 3 பேர் காயம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன், டி.எஸ்.பழனிவேல் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 74). ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர்.
அதே பகுதியில் வசிக்கும் 12 நபர்களுடன் வேனில் அறுபடைவீடு முருகன் கோவிலுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்று விட்டு அதிகாலை 3.30 மணி அளவில் வந்தவாசி சாலையில் குளமந்தை பஸ் ஸ்டாப் அருகே வந்துகொண்டிருந்தனர்.
அப்போது டிரைவர் தூக்க கலக்கத்தில் சாலை ஓர பனைமரத்தில் வேன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முன் சீட்டில் இருந்த நரசிம்மன் கண்ணாடி உடைந்து கீழே விழுந்து, பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே நரசிம்மன் பரிதாபமாக இறந்தார்.வேனில் இருந்து வேதாச்சலம், வடிவேலன், சின்னம்மா ஆகியோர்க ளுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் செய்யாறு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. ஆய்வு
- ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது
செய்யாறு:
செய்யாறு ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அருகில் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிழற்குடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆற்காடு சாலையில் கல்லூரி அருகில் நிழற்குடம் கட்ட இடத்தை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெ.கே. சீனிவாசன், ஞானவேல் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






