என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செங்கம், ஆரணியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  X

  செங்கத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.குமார் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  செங்கம், ஆரணியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாஜக.வை கண்டித்து கோஷம் எழுப்பினர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

  செங்கம்:

  செங்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்திக்கு எதிராக 2019- ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

  இதை தொடர்ந்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த போராட்டத்தின் போது மோடி அரசை கண்டித்தும், பாஜக.வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் குணசேகரன், சுப்பிரமணி, காமராஜ், ராஜு உள்பட தொண்டர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஆரணியில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜா பாபு மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் மாவட்ட துணை தலைவர் சாந்தகுமார் நகர பொருளாளர் பிள்ளையார் நிர்வாகிகள் பாபு சம்மந்தம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

  Next Story
  ×