என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • 31-ந்தேதி கடைசி நாள்
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கு 26.12.2002 முதல் 26.6.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

    பள்ளி கல்வி வாரியங்க ளின் கவுன்சிலில் உறுப்பினராக பட்டியலிடப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத் துடன் 10-ம் வகுப்பு, பிளஸ்-2-க்கு சமமான தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும்.

    முதற்கட்ட தேர்வாக இணைய வழியில் பொதுஅறிவு மற் றும் ஆங்கிலம் சார்ந்த வினாக்கள் தேர்வும், 2-ம் கட்டமாக உடற்தகுதிகள் தேர்வும் நடைபெறும். 2 தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் இறுதியில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் http://agnipathvayu.cdac. in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ள அறிவிப் பைப் பார்த்து தேர்வு முறை, தேர்வுக்கு வேண்டிய ஆவணங் கள் உள்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியு டையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க. வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசிநாள் ஆகும்.

    மேலும் விவரங்களுக்கு 04175-233381என்ற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் கலந்து கொண் பயன்பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • பஸ்சை முந்தி செல்ல வழி விடாததால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    ஜமுனாமரத்தூர்- அமிர்தி நோக்கி கடந்த 23-ந் தேதி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    அந்த பஸ்சுக்கு பின்னால் வாளதொம்பை கிராமத்தை சேர்ந்த சின்னப்பை யன் என்பவரின் மகன் ரமேஷ் (வயது 25) மோட்டார் சைக் கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பஸ்சை முந்தி செல்ல முயன்று பலமுறை ஹாரன் அடித்துள்ளார். மலைபாதை என்பதால் பஸ் டிரை வரால் வழிவிட முடியவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் அமிர்தி அருகே உள்ள ஆற்றின் தரை பாலத்தில் பஸ் மெதுவாக சென்ற போது பஸ் மீது அவர் கற்களை வீசியுள் ளார். அப்போது பஸ்சின் பின் பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

    இது குறித்து பஸ் கண்டக்டர் திருப்பதி ஜமுனாமரத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்க குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

    • வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு
    • திருட்டை தடுக்க கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்த அறிவுறுத்தல்

    ஆரணி:

    ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ளதுணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலூர் சரகடி.ஐ.ஜி.முத்துசாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஆரணி சரகத்துக்கு உட்பட்ட ஆரணி டவுன், ஆரணி தாலுகா, களம்பூர், சந்தவாசல், கண்ண மங்கலம், ஆரணி மகளிர் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வழக்கு களை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து ஆரணி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆரணி காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அனைத்து வியாபாரி களையும் அழைத்து பொதுவான ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல் துறை முடிவு செய்யும், மேலும் பைக் திருட்டு குறித்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று கூறினார்.

    அப்போது ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந் திரன் உடன் இருந்தார்.

    • நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலுடன் இணைந்த யோகராமச்சந்திரசுவாமி கோவிலில் ராமநவமி பிரமோற்சவம் வருகிற 27ம்தேதி தொடங்கி 6ம்தேதி வரை 10நாட்கள் நடக்கிறது.

    இதைமுன்னிட்டு 27ம்தேதி மாலை அங்குரா ர்ப்பணத்துடன், மறுநாள் 28ம்தேதி காலை 6 மணிக்குள் த்வஜாரோகணம் கொடியேற்றுமும், சாமி புறப்பாடும் நடக்கிறது.தினமும் மாலையில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. தொடர்ந்து 5ம்தேதி காலையில் தீர்த்தவாரியுடன், பகல் 10.30 மணிமுதல் 12மணிக்குள் சுவாமி திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.

    பகல் 1 மணியளவில் பக்தர்கள் சார்பில் திருமண விழா அன்னதானம் உற்சவ மண்டபத்தில் நடக்கிறது. 6ம்தேதி காலை அன்னக்கூடை, திருப்பாவாடை உற்சவமும், மாலை 7.15மணிக்கு த்வஜா அவரோகணம் விடைசாதித்தல் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை படவேடு யோகராமர் கோவில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • 3 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன்(31). இவர் வந்தவாசியில் உள்ள நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை வசூலான ரூ.16.55 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு இரவு பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    வந்தவாசி-செய்யாறு சாலையில், புலிவாய் கூட்டுச்சாலை அருகே சென்ற போது, 2 கார்களில் வந்த 7 பேர் மணிமாறனை வழிமடக்கி காரில் கடத்திச் சென்றனர். ஆரணி அருணகிரி சத்திரம் அருகே சென்றபோது அந்தப் பகுதியில் ஆரணி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததை கண்ட மணிமாறன் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து போலீசார் துரத்திச் சென்று மணிமாறன் இருந்த காரை மடக்கினர். அப்போது அந்த காரிலிருந்த 5 பேரில் 4 பேர் ரூ.6.17 லட்சம் பணத்துடன் தப்பியோடிவிட்டனர். ஆரணியை அடுத்த புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(55) என்பவர் மட்டும் போலீசில் பிடிபட்டார். இதையடுத்து மணிமாறனையும், மீதி பணம் ரூ.10.38 லட்சத்தையும் போலீசார் மீட்டனர். மேலும் மற்றொரு காரில் வந்த இருவர் காருடன் தப்பிவிட்டனர். இதைத் தொடர்ந்து பிடிபட்ட ஆறுமுகம், மீட்கப்பட்ட மணிமாறன் மற்றும் பணத்தை வந்தவாசி வடக்கு போலீசாரிடம் ஆரணி போலீசார் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் மற்றொரு காரில் தப்பிய இருவரும் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வந்தவாசி வடக்கு போலீசாரிடம் நேற்று அதிகாலை காருடன் பிடிபட்டனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் இருவரும் செய்யாறை அடுத்த ஜடேரி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு(21), செய்யாறை அடுத்த பெரும்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார்(24) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து மணிமாறன் அளித்த புகாரின் பேரில் தங்கவேலு, அஜித்குமார், ஆறுமுகம், ஆரணியை சேர்ந்த ராம்கி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு வந்தவாசி வடக்கு போலீசார் தங்கவேலு, அஜித்குமார், ஆறுமுகம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    மணிமாறன், தங்கவேலு, அஜித்குமார் ஆகிய 3 பேரும் அந்த நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வசூலான பணத்தை மணிமாறன் செய்யாறுக்கு பைக்கில் எடுத்துச் செல்வதை அறிந்த தங்கவேலு, அஜித்குமார் ஆகிய இருவரும் அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு, ஆரணி ராம்கி தரப்பினரை உடன் அழைத்துக் கொண்டு இரு கார்களில் சென்று மணிமாறனை கடத்தியுள்ளனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தப்பியோடிய ராம்கி உள்ளிட்ட 4 பேரை தேடி வருகிறோம் என்றனர்.

    • வேலுசாமி குடும்பத்திற்கும், வடிவேல் குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • தலைமறைவாக இருந்த வேடி மற்றும் 17 வயது சிறுவனை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.

    கீழ்ன்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி (வயது 51). மண்பாண்ட தொழிலாளி. இவரது மனைவி சுசிலா (45). இவர்களுக்கு தமிழழகன் (17), கோபிநாத் (12). என 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்களது எதிர் வீட்டில் வசிப்பவர் வடிவேல். இவரது மனைவி சாந்தி (42). தம்பதிகளுக்கு வேடி (19), 17 வயது உடைய சிறுவன் ஒருவன் என 2 மகன்கள் உள்ளனர்.

    வேலுசாமி குடும்பத்திற்கும், வடிவேல் குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பகல் வேலுசாமி வீட்டின் முன்பு கேமரா பொருத்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது சாந்தி ஏன் எங்களது வீடு தெரிகிற மாதிரி கேமரா பொருத்துகிறாய் என்று வேலுசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு வேலுசாமி நீங்கள் அடிக்கடி என்னிடம் தகராறில் ஈடுபடுகிறீர்கள் அதனால் கேமரா பொருத்துகிறேன் என்று கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த வேலுசாமி சாந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட சாந்தியின் மகன்கள் வேடி மற்றும் சிறுவன் ஓடி வந்து வேலுசாமியை அடித்து உதைத்து அருகில் இருந்த மண்வெட்டியால் தலையில் தாக்கினர்.

    இதில் வேலுசாமியின் மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை தடுக்க வந்த வேலுசாமியின் மனைவி சுசிலா, தாயார் நல்லம்மா ஆகியோர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வேலு சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வேடி மற்றும் 17 வயது சிறுவனை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • விண்ணப்பங்களை வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்த மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்க உள்ளது.

    மேலும் அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது.

    இதனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது "அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழிசேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் நோக்கமானது அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்து இ-சேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.

    எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் "அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இணையமுறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in/, https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தலாம்.

    விண்ணப்பங்களை வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும் கிராமப்புறங்களில் இ-சேவை செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆகும்.

    மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆகும்.

    இவ்விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் கூறிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கொங்கிராம்பட்டு மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். ஆட்டோ டிரைவர்.

    இவரது மகன் தினேஷ் (வயது 19). இவர் வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் பெற்றோர் உறவினர்கள் தினேஷை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். தினேஷ் கிடைக்காததால் கண்ணமங்கலம் போலீசில் தினேஷின் தாயார் தேன்மொழி புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அகற்ற கோரி பா.ம.க.வினர் போராட்டம்
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஏழுமலை, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாராயணசாமி, மாவட்ட தலைவர் பெரியசாமி, பாட்டாளி சமூக ஊடக பேரவை மாவட்ட செயலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் உதயராகவ் வரவேற்றார்.

    இதில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிய இந்து சமய அறநிலைத்துறையை வரவேற்கிறோம்.

    மேலும் இடிக்கப்பட்ட அம்மணி அம்மன் கட்டிடம் கட்டப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். திருவண்ணாமலை நகரில் நடைபெற்று வரும் அனைத்து சாலை பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தங்கும் விடுதி கட்டி பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • போலீசார் விசாரணை
    • அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை

    திருவண்ணாமலை:

    விழுப்புரம் மாவட்டம் தேவனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவரின் மகன் பொன் முடி (வயது 33), கட்டிட தொழிலாளி.

    இவர் வெறையூர் அருகே அண்டம்பள்ளம் கிராமத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பொன் முடி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வெறையூர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத ைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் நடந்தது
    • பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தரணி தலைமையில், கண்ணமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குள் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர் களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் 19 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டும் மதுவகைகளை விற்பனை செய்யவும், கடைமுன் யாரும் குடிக்க அனுமதிக்கக்கூடாது, மொத்தமாக யாருக்கும் மதுவகைகளை ஒரே நபருக்கு விற்பனை செய்வது கூடாது என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இதில் அம்மாபாளையம், அழகுசேனை, விநாயகபுரம், வண்ணாங்குளம் ஆகிய பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கணவர் கண்முன்பே பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி, கூலி தொழிலாளி. இவரது மனைவி தேவிபாலா (வயது 28), இவர்களின் மகன் தர்ஷன் (3).

    இந்த நிலையில் கணபதி, மனைவி, மகனுடன் மோட் டார்சைக்கிளில் நேற்று திரு வண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் உள்ள உறவி னர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந் தார்.

    தூசி அருகே அய்யங்கார் குளம் கூட்டுரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்தலாரி மோட்டார்சைக்கிள் மீது உரசியது. இதில் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

    அப்போது கணவர் கண் முன்பே தேவிபாலா தலை மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று தேவி பாலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×