என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ம.க.வினர் போராட்டம்"

    • அகற்ற கோரி பா.ம.க.வினர் போராட்டம்
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஏழுமலை, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாராயணசாமி, மாவட்ட தலைவர் பெரியசாமி, பாட்டாளி சமூக ஊடக பேரவை மாவட்ட செயலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் உதயராகவ் வரவேற்றார்.

    இதில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிய இந்து சமய அறநிலைத்துறையை வரவேற்கிறோம்.

    மேலும் இடிக்கப்பட்ட அம்மணி அம்மன் கட்டிடம் கட்டப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். திருவண்ணாமலை நகரில் நடைபெற்று வரும் அனைத்து சாலை பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தங்கும் விடுதி கட்டி பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    ×