என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் பிரமோற்சவ விழா"

    • நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலுடன் இணைந்த யோகராமச்சந்திரசுவாமி கோவிலில் ராமநவமி பிரமோற்சவம் வருகிற 27ம்தேதி தொடங்கி 6ம்தேதி வரை 10நாட்கள் நடக்கிறது.

    இதைமுன்னிட்டு 27ம்தேதி மாலை அங்குரா ர்ப்பணத்துடன், மறுநாள் 28ம்தேதி காலை 6 மணிக்குள் த்வஜாரோகணம் கொடியேற்றுமும், சாமி புறப்பாடும் நடக்கிறது.தினமும் மாலையில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. தொடர்ந்து 5ம்தேதி காலையில் தீர்த்தவாரியுடன், பகல் 10.30 மணிமுதல் 12மணிக்குள் சுவாமி திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.

    பகல் 1 மணியளவில் பக்தர்கள் சார்பில் திருமண விழா அன்னதானம் உற்சவ மண்டபத்தில் நடக்கிறது. 6ம்தேதி காலை அன்னக்கூடை, திருப்பாவாடை உற்சவமும், மாலை 7.15மணிக்கு த்வஜா அவரோகணம் விடைசாதித்தல் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை படவேடு யோகராமர் கோவில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×