என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியரை காரில் கடத்ல்"

    • 3 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன்(31). இவர் வந்தவாசியில் உள்ள நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை வசூலான ரூ.16.55 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு இரவு பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    வந்தவாசி-செய்யாறு சாலையில், புலிவாய் கூட்டுச்சாலை அருகே சென்ற போது, 2 கார்களில் வந்த 7 பேர் மணிமாறனை வழிமடக்கி காரில் கடத்திச் சென்றனர். ஆரணி அருணகிரி சத்திரம் அருகே சென்றபோது அந்தப் பகுதியில் ஆரணி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததை கண்ட மணிமாறன் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து போலீசார் துரத்திச் சென்று மணிமாறன் இருந்த காரை மடக்கினர். அப்போது அந்த காரிலிருந்த 5 பேரில் 4 பேர் ரூ.6.17 லட்சம் பணத்துடன் தப்பியோடிவிட்டனர். ஆரணியை அடுத்த புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(55) என்பவர் மட்டும் போலீசில் பிடிபட்டார். இதையடுத்து மணிமாறனையும், மீதி பணம் ரூ.10.38 லட்சத்தையும் போலீசார் மீட்டனர். மேலும் மற்றொரு காரில் வந்த இருவர் காருடன் தப்பிவிட்டனர். இதைத் தொடர்ந்து பிடிபட்ட ஆறுமுகம், மீட்கப்பட்ட மணிமாறன் மற்றும் பணத்தை வந்தவாசி வடக்கு போலீசாரிடம் ஆரணி போலீசார் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் மற்றொரு காரில் தப்பிய இருவரும் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வந்தவாசி வடக்கு போலீசாரிடம் நேற்று அதிகாலை காருடன் பிடிபட்டனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் இருவரும் செய்யாறை அடுத்த ஜடேரி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு(21), செய்யாறை அடுத்த பெரும்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார்(24) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து மணிமாறன் அளித்த புகாரின் பேரில் தங்கவேலு, அஜித்குமார், ஆறுமுகம், ஆரணியை சேர்ந்த ராம்கி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு வந்தவாசி வடக்கு போலீசார் தங்கவேலு, அஜித்குமார், ஆறுமுகம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    மணிமாறன், தங்கவேலு, அஜித்குமார் ஆகிய 3 பேரும் அந்த நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வசூலான பணத்தை மணிமாறன் செய்யாறுக்கு பைக்கில் எடுத்துச் செல்வதை அறிந்த தங்கவேலு, அஜித்குமார் ஆகிய இருவரும் அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு, ஆரணி ராம்கி தரப்பினரை உடன் அழைத்துக் கொண்டு இரு கார்களில் சென்று மணிமாறனை கடத்தியுள்ளனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தப்பியோடிய ராம்கி உள்ளிட்ட 4 பேரை தேடி வருகிறோம் என்றனர்.

    ×