என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர் மாயம்"
- திருப்பதி கோவை ராஜவீதியில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
- திருப்பதி அதன் பிறகு பள்ளிக்கு திரும்பவில்லை.
கோவை,
கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் சின்னான். தற்போது திருச்சியில் வசிக்கிறார். இவரது மகன் திருப்பதி (வயது 13). கோவை ராஜவீதியில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மாதம் 24-ந் தேதி காலை பள்ளி வகுப்பறையில் வெளியே சென்ற திருப்பதி அதன் பிறகு பள்ளிக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உக்கடம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் திருப்பதியை தேடி வருகிறார்கள்.
- கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கொங்கிராம்பட்டு மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். ஆட்டோ டிரைவர்.
இவரது மகன் தினேஷ் (வயது 19). இவர் வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் பெற்றோர் உறவினர்கள் தினேஷை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். தினேஷ் கிடைக்காததால் கண்ணமங்கலம் போலீசில் தினேஷின் தாயார் தேன்மொழி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழரசு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
- திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் தமிழரசு. தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாட்டியாவின் கல்லூரி அடையாள அட்டை மற்றும் பிற சான்றுகளையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
- உங்களுடைய உதவி முக்கியம் வாய்ந்தது என சிர்சா கேட்டுக் கொண்டார்.
லண்டன்:
இந்தியாவை சேர்ந்த மாணவர் ஜி.எஸ்.பாட்டியா என்பவர் லெவுப்ரோ பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கிழக்கு லண்டனில் தங்கியிருந்த அவர் கடந்த 15-ந்தேதி முதல் மாயமானார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவரான மன்ஜீந்தர் சிங் சிர்சா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். உங்களுடைய உதவி முக்கியம் வாய்ந்தது என சிர்சா கேட்டுக் கொண்டார்.
பாட்டியாவின் கல்லூரி அடையாள அட்டை மற்றும் பிற சான்றுகளையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த செய்தியை மக்கள் பகிர வேண்டும் என கேட்டு கொண்டதுடன், இந்திய மாணவரை பற்றி ஏதேனும் தகவல் இருக்குமென்றால் தொடர்பு கொள்ளும்படி 2 எண்களையும் பகிர்ந்து உள்ளார். கடைசியாக கடந்த 15-ந்தேதி கிழக்கு லண்டனின் கேனரி வார்ப் பகுதியில் அவர் தென்பட்டார். அதன்பின்னர் அவரை காணவில்லை. இதனால், அவரை கண்டறியும் முயற்சியில் இந்திய தூதரகம் மற்றும் பல்கலைக்கழகம் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.






