என் மலர்
நீங்கள் தேடியது "20 ஆண்டு சிறை"
- ஆப்பிரிக்க நாடான சாட்டில் முன்னாள் பிரதமர் சக்ஸஸ் மஸ்ரா கலவரத்தை தூண்டினார்.
- இதற்காக அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
என்ஜாமினா:
ஆப்பிரிக்க நாடான சாட்டின் முன்னாள் பிரதமர் சக்ஸஸ் மஸ்ரா (41). தற்போது பிரதான எதிர்க்கட்சியான லெஸ் டிரான்ஸ்பார்மேட்டர்ஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.
முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ச்சி நடைபெற்றது. இந்தக் கலவரத்தில் 30 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட அதிபர் இட்ரிஸ் டெனி இட்னோ கொல்லப்பட்டார்.
இதனால் அவரது மகன் மஹாமத் டெபி ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் பதவியை சட்டப்பூர்வமாக மாற்றினார்.
இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவரான மஸ்ரா, அதிபர் மஹாமத் டெபியை கடுமையாக விமர்சித்தார்.
இதனையடுத்து லோகோன் ஆக்சிடென்டல் பகுதியில் கடந்த மே மாதம் விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த 35 பேர் பலியாகினர்.
இதற்கு மஸ்ராவே முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. எனவே கலவரத்தைத் தூண்டியதாகக் கூறி போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு தலைநகர் என்ஜாமினாவில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் மஸ்ராவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் சுமார் ரூ.15 கோடி அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள மஸ்ரா இதனை எதிர்த்து மேல்–மு–றை–யீடு செய்ய போவ–தாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய சம்பவம் சாட் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
- மாணவியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட வழக்கில் தண்டனை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாணவியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கூலி தொழிலாளி
தண்டராம்பட்டு தாலுகா மலைமஞ்சனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 24). இவர் சென்னையில் கூலி தொழில் செய்து வந்தார். இவருடன் திருவண்ணாமலை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் வேலை செய்து வந்தார். ஆனந்தகுமார் திருவண்ணாமலையில் உள்ள அந்த நபரின் வீட்டிற்கு வரும் போது அவரது 15 வயது 10-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த மகளுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
பின்னர் அவர் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி வலுகட்டாயமாக கடந்த சென்னைக்கு அழைத்து சென்று உள்ளார்.
அங்கு அவர் மாணவியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையில் மாணவியை காணவில்லை என்று அவரது பெற்றோர் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான மாணவி சென்னையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மாணவியை மீட்டனர். மேலும் ஆனந்தகுமாரை கைது செய்தனர்.
கோர்ட்டு தீர்ப்பு
இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கில் மைதிலி ஆஜரானார். இந்த நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்து நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தகுமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். பின்னர் ஆனந்தகுமாரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 2 ஆண்டுகள், போக்சோ சட்டத்தில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- அவர்கள் இருவருக்கும் தலா, 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. இவரை மோரமடுகு அடுத்த கோவில்கொட்டாயை சேர்ந்த வேடியப்பன் (28) என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். அவரிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வேடியப்பன் தன் நண்பர் குணசேகர் (29) என்பவருடன் சேர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வேடியப்பன், குணசேகர் இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட வேடியப்பன் அவருக்கு துணையாக இருந்த குணசேகர் இருவருக்கும் சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 2 ஆண்டுகள், போக்சோ சட்டத்தில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் இருவருக்கும் தலா, 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
மேலும் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.
- வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
- வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திம்மப்பனை கைது செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளிஅருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மப்பன்(வயது 45). தொழிலாளி. இவர் கடந்த 2020- ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய மகேந்திர மங்கலம் போலீசார் போக்சோ மற்றும் எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திம்மப்பனை கைது செய்தனர்.
இந்த வழக்கு தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிவில் திம்மப்பன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.
இதையடுத்து திம்மப்பனுக்கு போக்சோ சட்ட பிரிவின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத்பக்ரதுல்லா தீர்ப்பளித்தார்.






