என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை-ரூ. 20 ஆயிரம் அபராதம்
- வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
- வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திம்மப்பனை கைது செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளிஅருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மப்பன்(வயது 45). தொழிலாளி. இவர் கடந்த 2020- ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய மகேந்திர மங்கலம் போலீசார் போக்சோ மற்றும் எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திம்மப்பனை கைது செய்தனர்.
இந்த வழக்கு தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிவில் திம்மப்பன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.
இதையடுத்து திம்மப்பனுக்கு போக்சோ சட்ட பிரிவின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத்பக்ரதுல்லா தீர்ப்பளித்தார்.
Next Story






