என் மலர்
திருவண்ணாமலை
- 1600 சிறப்பு பஸ்கள்-4 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து
- 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த வருடம் சித்ரா பவுர்ணமி வருகிற 4-ந்தேதி இரவு தொடங்கி 5-ந்தேதி இரவு நிறைவடைகிறது.
சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீரமாக நடந்து வருகிறது. பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்ய வசதியாக கட்டணமில்லா தரிசன சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு வழி தரிசனம் செய்ய விரும்புவோர் நலன்கருதி, ரூ.50-க்கான கட்டண சேவை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழக்கம் போல் கிழக்கு ராஜ கோபுரத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவர், இந்த ஆண்டு முதல் கிழக்கு ராஜ கோபுரத்தில் வலது உட்புறம் வழியே அனுமதிக்கப்பட்டு, 1000 கால் மண்டபத்தில் பக்தர்களை அமர வைத்து ஒருவர் பின் ஒருவராக வள்ளால மகாராஜா கோபுரத்தின் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக 3 இடங்களில் இளைப்பாறும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இளைப்பாறும் கூடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டணமில்லாத சேவையாக பயன்படுத்தும் வகையில் தனித்தனியே குளியல் அறைகள் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி பக்தர்கள் வரிசையில் வந்து தரிசனம் செய்யும் வகையில், திருமஞ்சன கோபுரம். பே கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மூலம் தகுந்த கியூலைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
14 கி.மீ தூரம் உள்ள கிரிவலப்பாதை சுற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கோவிலின் உள்ளே பக்தர்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக வசதியாக வரிசையை முறை படுத்த வேண்டும்.
சித்ரா பவுர்ணமி அன்று கிரிவல பாதையில் தீயணைப்பு துறையினர் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். கிரிவலம் வரும் பக்தர்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை தவிர்த்து துணிப்பையை எடுத்து வர வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, சுற்றுச்சூழலை காத்திட முழு ஒத்துழைப்பு வழங்கி பிளாஸ்டிக் மாசில்லா திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோவிலில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று 4 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் இருந்து 1600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பக்தர்களின் பாதுகாப்புக்காக 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர்.
- தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் முறையாறு அருகே நேற்று காலை புதுச்சேரி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் எதிர்பாராத விதமாக அரசு பஸ் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மேல்செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகிறார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட காஞ்சி குண்று மேடு பாலசுப்ரமணியர் கோவில், புதூர் மாரியம்மன் கோவிலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது.
புதூர் மாரியம்மன் கோவிலில் தேர் இழுத்து சிறப்பு அபிஷேகங்கள் செய்து பொதுமக்களுக்கு வி.பன்னீர்செல்வம் அன்னதானம் வழங்கினார்.
இதேபோல புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி குன்றுமேடு பாலசுப்பிரமணியர் கோவிலில் உள்ள மூலவர்களுக்கு வி.பன்னீர்செல்வம் சிறப்பு அபிஷேகங்கள் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பொய்யாமொழி, ஆலத்தூர் கே.மூர்த்தி, காரப்பட்டு ரமேஷ், பேரூர் செயலாளர் ராதா உட்பட முக்கிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- பெண்ணை தாக்கி துணிகரம்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பழம்பேட்டை பள்ளத்தெ ருவை சேர்ந்தவர் முன் னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சேகர் (60). இவ ரது மனைவி சித்ரா (45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவ ரும் திருமணமாகி சென் னையில் வசித்து வருகின்ற னர்.
நேற்று முன்தினம் இரவு சேகர் தூங்கிய பிறகு, 11 மணியள வில் அவரது மனைவி சித்ரா கதவுகளை மூடி விட்டுதூங்க சென்றார். நள் ளிரவு சுமார் 12 மணியள வில் வீட்டில் ஏதோ சத்தம் கேட்டதால் சித்ரா எழுந்து பார்த்தார். அப்போது மர்ம கும்பல் 2 பேர் மறைந்திருப்பதை பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட முயன்றார். அப்போது அதிலிருந்து ஒருவர் சித்ராவை திடீரென தாக்கினார். இதில் சித்ரா மயங்கி கீழே விழுந்தார். சிறிது நேரம் கழித்து
மயக்கம் தெளித்து எழுந்த சித்ரா, கழுத்தில் இருந்த 8 பவுன் தாலி செயினை மர்ம கும்பல் பறித்து சென்றது தெரியவந் தது. உடனே அலறி கூச்ச லிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த போது மருமகும்பல் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
பின்னர் இது குறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசா ரணை நடத்தினர்.
விசாரணையில் கொள்ளை கும்பல் முன்கூட்டியே வீடு புகுந்து பதுங்கியிருந்து நள்ளிரவு கைவரிசை காட்டியது தெரியவந் தது.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறவினர் வீட்டுக்கு சென்றார்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அருகே மழையூர் எடப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பன் என்பவரின் மனைவி சகுந்தலா (வயது 72). இவர் நேற்று முன்தினம் மாலை வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அந்த கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு நடந்து சென்றார். வந்தவாசி- சேத்துப்பட்டு சாலையில் நடந்து செல்லும்போது, அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சகுந்தலாவின் தங்கை சிவகாமி பொன்னூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 195 கிராம் தங்கம், 1 கிலோ 205 கிராம் வெள்ளி இருந்தது
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தின மும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். பங் குனி மாதத்திற்கான பவுர்ணமி கடந்த 5-ந் தேதி காலையில் தொடங்கி 6-ந் தேதி காலையில் நிறைவடைந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
இந்த நிலையில் பங்குனி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவிலில் உள்ள திருக் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த பணி கோவில் இணை ஆணையர் குமரேஷன் முன் னிலையில் நடைபெற்றது. இதில் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில் களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் உண்டியல் காணிக்கையாக 195 கிராம் தங்கம், 1 கிலோ 205 கிராம் வெள்ளி, ரூ.2 கோடியே 7 லட்சத்து 6 ஆயிரத்து 201 பெறப்பட்டது.
- தாய், மகன் படுகாயம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் அடுத்த எட்டிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 65). இவரது மனைவி கிளியம்மாள் (45). இவர்களுக்கு வெங்கடேசன் (25), விக்னேஷ் (21) என 2 மகன்கள் உள்ளனர். விக்னேஷ் கலசபாக்கம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
வெங்கடேசன் வேலூர் இடையஞ் சாத்தில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். கிளியம்மாள் சித்தாள் வேலை செய்து வருகிறார்.
நேற்று வேலை சம்பந்தமாக கிளியம்மாள், வெங்கடேசன், விக்னேஷ் ஆகியோர் பைக்கில் வேலூருக்கு வந்தனர். பின்னர் இரவு வேலூரில் இருந்து கண்ணமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலார்த்து வென்றான் கிராமத்தில் அருகே வரும்போது எதிரே வந்த தனியார் பஸ் இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் விக்னேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கிளியம்மாள், வெங்கடேசன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தட்சிணாமூர்த்தி சந்தவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கீழ்க் கொடுங்காலூர் திருவள்ளு வர் நகரைச் சேர்ந்தவர் கதி ரேசன் (வயது 52), கார் டிரை வர். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கதிரேசன் மோட்டார்சைக்கிளில் கீழ்க் கொடுங்காலூரில் இருந்து வந்தவாசி வழியாக ஆராசூ ருக்கு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். வந்தவாசி- சேத்துப்பட்டு சாலை, கீழ்சாத்தமங்கலம் புறவழிச்சாலை சந்திப்பு பகு தியில் வரும்போது எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கதிரேசன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்த வாசி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பொன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
- தற்காலிகமாக மாற்று ஏற்பாடு மூலம் குடிநீர் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் மேல் கல்பட்டு தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பழுதடைந்ததால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
கடந்த 19-ந் தேதி கல்பட்டு கிராமத்தில் காளைவிடும் விழா நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு காளை விடும் விழாவை தொடங்கிவைக்க ஊராட்சி மன்ற தலைவர் திலகவதியும், அவரது கணவர் ஜீவரத்தினமும் அந்த வழியாக சென்றனர்.
அவர்களிடம் தங்கள் பகுதியில் குடிநீர் வசதியை சரிசெய்ய கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னர் அதே வழியாக வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனியை வழிமடக்கி, தண்ணீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து ஊராட்சி தலைவரிடம் பேசி விரைவில் சரி செய்யப்படும் என்று அவர் கூறினார். அதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து ஊராட்சி மன்றம் சார்பில், தற்காலிகமாக மாற்று ஏற்பாடு மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.
- மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அணக்காவூர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
செய்யாறு:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நாகவேடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி.
இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தோழியின் வீட்டிற்கு அடிக்கடி சென்றார்.
அப்போது தோழியின் உறவினரான 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். அந்த வாலிபர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இதில் மாணவி கர்ப்பமானார். அந்த வாலிபர் கருவை கலைக்குமாறு கூறினார்.
மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். இந்நிலையில் வாலிபர் நேற்று பகல் செய்யாறு அடுத்த நெடுங்கல் கிராமம் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு மாணவியை அழைத்துச் சென்றார். பின்னர் மாணவியை கோவில் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் திருமணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் பெல்டால் மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்.
மாணவியின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பொதுமக்கள் வருவதை கண்ட வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
பின்னர் மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அணக்காவூர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
- 22-ந் தேதி நடக்கிறது
- 19 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்
திருவண்ணாமலை:
தமிழக அரசு செயல்படுத்தும் இலவச மருத்துவ சேவைக்கான 108 ஆம்புலன்சு வாகனங்களில் பணிபுரிய மருத்துவ உதவி யாளர்கள், டிரைவர்கள் நேரடி தேர்வு மூலம் தேர்வு செய் யப்பட உள்ளனர்.
இதற்கான தேர்வு முகாம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி. நர்சிங், டி.எம்.எல்.டி., பி.எஸ்சி. அறிவியல் பிரிவு பட்டப்படிப்பு முடித்தவர்கள் பணிக்கு தகுதி உடையவர்கள். 19 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.15,435 வழங்கப்படும்.
அதேபோல் டிரைவர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளவர்கள் தகுதியுள்ளவர்கள். டிரைவர் பணிக்கு ரூ.15,235 மாத ஊதியமாக வழங்கப்படும். தகுதி யுள்ள, ஆர்வமுள்ள நபர்கள் நேரடி பணி நியமன தேர்வில் பங்கேற்கலாம்.
இந்த தகவலை 108 ஆம்புலன்சு சேவை மையத்தினர் தெரிவித்துள்ளனர்.
- மின் ஊழியர்கள் மேலே ஏறி செல்ல முடிவதில்லை என குற்றச்சாட்டு
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
செங்கம்:
செங்கம் பகுதியில் வழிகாட்டி பலகைகளை மறைத்து விளம்பர பதாகைகள் கட்டப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள், பயிற்சி மையங்களில் விளம்பர பதாகைகள், விளம்பர நோட்டீஸ்கள் வழிகாட்டி பலகைகளில் ஒட்டி மறைக்கப்படுகிறது.
இதனால் வழி தெரியாமல் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
குறிப்பாக ஊர் பெயர்கள் மற்றும் கிலோமீட்டர் குறிப்பிட்டு ஆங்காங்கே வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற வழிகாட்டி பலகைகள் மற்றும் மின் கம்பங்களிலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்களின் விளம்பர பதாகைகள் கட்டி விளம்பரங்கள் செய்யப்படுகிறது.
மின் கம்பங்களில் அவசரத்திற்கு கூட மின் ஊழியர்கள் மேலே ஏறி செல்ல முடிவதில்லை. விளம்பரப் பதாகைகளை அப்புறப்படுத்திய பின்னரே கம்பத்தின் மேலே செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.
எனவே பேரூராட்சி சார்பில் மின் கம்பங்கள் மற்றும் வழிகாட்டி பலகைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






