என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்"

    • மின் ஊழியர்கள் மேலே ஏறி செல்ல முடிவதில்லை என குற்றச்சாட்டு
    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    செங்கம்:

    செங்கம் பகுதியில் வழிகாட்டி பலகைகளை மறைத்து விளம்பர பதாகைகள் கட்டப்படுகிறது.

    தனியார் நிறுவனங்கள், பயிற்சி மையங்களில் விளம்பர பதாகைகள், விளம்பர நோட்டீஸ்கள் வழிகாட்டி பலகைகளில் ஒட்டி மறைக்கப்படுகிறது.

    இதனால் வழி தெரியாமல் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    குறிப்பாக ஊர் பெயர்கள் மற்றும் கிலோமீட்டர் குறிப்பிட்டு ஆங்காங்கே வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற வழிகாட்டி பலகைகள் மற்றும் மின் கம்பங்களிலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்களின் விளம்பர பதாகைகள் கட்டி விளம்பரங்கள் செய்யப்படுகிறது.

    மின் கம்பங்களில் அவசரத்திற்கு கூட மின் ஊழியர்கள் மேலே ஏறி செல்ல முடிவதில்லை. விளம்பரப் பதாகைகளை அப்புறப்படுத்திய பின்னரே கம்பத்தின் மேலே செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.

    எனவே பேரூராட்சி சார்பில் மின் கம்பங்கள் மற்றும் வழிகாட்டி பலகைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×