என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  108 ஆம்புலன்சில் பணிபுரிய மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு நேரடி தேர்வு
  X

  108 ஆம்புலன்சில் பணிபுரிய மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு நேரடி தேர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 22-ந் தேதி நடக்கிறது
  • 19 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்

  திருவண்ணாமலை:

  தமிழக அரசு செயல்படுத்தும் இலவச மருத்துவ சேவைக்கான 108 ஆம்புலன்சு வாகனங்களில் பணிபுரிய மருத்துவ உதவி யாளர்கள், டிரைவர்கள் நேரடி தேர்வு மூலம் தேர்வு செய் யப்பட உள்ளனர்.

  இதற்கான தேர்வு முகாம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

  மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி. நர்சிங், டி.எம்.எல்.டி., பி.எஸ்சி. அறிவியல் பிரிவு பட்டப்படிப்பு முடித்தவர்கள் பணிக்கு தகுதி உடையவர்கள். 19 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.15,435 வழங்கப்படும்.

  அதேபோல் டிரைவர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளவர்கள் தகுதியுள்ளவர்கள். டிரைவர் பணிக்கு ரூ.15,235 மாத ஊதியமாக வழங்கப்படும். தகுதி யுள்ள, ஆர்வமுள்ள நபர்கள் நேரடி பணி நியமன தேர்வில் பங்கேற்கலாம்.

  இந்த தகவலை 108 ஆம்புலன்சு சேவை மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

  Next Story
  ×