search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public protest with empty seats"

    • பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
    • தற்காலிகமாக மாற்று ஏற்பாடு மூலம் குடிநீர் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் மேல் கல்பட்டு தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பழுதடைந்ததால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

    கடந்த 19-ந் தேதி கல்பட்டு கிராமத்தில் காளைவிடும் விழா நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு காளை விடும் விழாவை தொடங்கிவைக்க ஊராட்சி மன்ற தலைவர் திலகவதியும், அவரது கணவர் ஜீவரத்தினமும் அந்த வழியாக சென்றனர்.

    அவர்களிடம் தங்கள் பகுதியில் குடிநீர் வசதியை சரிசெய்ய கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    பின்னர் அதே வழியாக வந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனியை வழிமடக்கி, தண்ணீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து ஊராட்சி தலைவரிடம் பேசி விரைவில் சரி செய்யப்படும் என்று அவர் கூறினார். அதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து ஊராட்சி மன்றம் சார்பில், தற்காலிகமாக மாற்று ஏற்பாடு மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.

    ×