என் மலர்
திருவண்ணாமலை
- மரம் சாய்ந்து 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூரில் நேற்று மாலை 6 மணி முதல் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இரவு 9.30 மணி அளவில் மழை பெய்த போது, கீழ்பென்னாத்தூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள சாலை ஓரத்தில் இருந்த புளியமரம் விழுந்தது.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ்கள், லாரிகள், கார்கள் என அனைத்தும் கீழ்பென்னாத்தூர் புறவழிச்சாலை வழியாக செல்ல போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.
மரம் சாலையில் விழுந்ததை அடுத்து நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சாலை பணியாளர்கள் உடனடியாக விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை சாலையின் ஓரமாக அகற்றினார்கள். இதனை அடுத்து இரவு 11:30 மணி அளவில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு பஸ்கள் சீராக சென்றது.
மழையின் காரணமாக இரவு 9.30 மணி முதல் விடியற்காலை 3 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானர்கள்.
- மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா பேருராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமை யில் நடைபெற்றது.
வாசகர் வட்டத்தலைவர் பி.சி.கார்த்திகேயன், வார்டு உறுப்பினர் சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை நூலகர் சிவசங்கர் வரவேற்று பேசினார்.
விழாவில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டது.
வாசகர் வட்ட உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் திருமால் நன்றி கூறினார்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு
- கிருஷ்ணர் வேடம் அணிந்த பக்தர் பஜனை பாடல்கள் பாடினார்
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள வடதண்டலம் கிராமத்தில் ராதா ருக்மணி சத்திய பாமா சமேத ஸ்ரீ வேணுகோபால் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பட்டாச்சாரியார்கள் கலசங்களை சுமந்து கோவிலை வளம் வந்து கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காட்டி கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.விழாவின்போது கிருஷ்ணர் வேடம் அணிந்த பக்தர் பஜனை பாடல்கள் பாடினார். ஒ.ஜோதி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே. சீனிவாசன், ஞானவேலு மற்றும் அ.தி.மு.க. நகர செயலாளர் கு.வெங்கடேசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினரான ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பரசுராமன், முன்னாள் தலைவர்கள் ஆதி கேசவன், இந்திரகுமார் மற்றும் ஆதிமூலம் ஆகியோர்கள் செய்திருந்தனர்.
- 20 லட்சம் பக்தர்கள் வருகை
- கலெக்டர் முருகேஷ் ஆய்வு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் சித்ரா பவுணர்மியையொட்டி வருகிற 4,5-ந்தேதிகளில் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு இலவச தரிசனம், ரூ.50 - க்கான சிறப்பு தரிசனம் என 2 பிரிவுகளாக செல்லும் வகையில் தடுப்புகள் வைக்கப்பட உள்ளன.
கோவிலில் சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:-
ராஜகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், பேகோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் பகுதிகளில் பக்தர்கள் செல்ல தூய்மையான முறையில் வைத்திருத்தல் வேண்டும்.
கோவிலை சுற்றி ஆட்டோ, சுற்றுலா வாகனங்கள், பஸ்கள் ஆகியவை நிறுத்த அனுமதியில்லை. சாலையோர சிறுவணிகர்கள் அனுமதி மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமே சிறு வணிக கடைகள் அமைக்க வேண்டும்.
மேலும் ஆயிரங்கால் மண்டபத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சோதனை முயற்சியாக 500 முதல் 1000 பக்தர்களை திட்டி வாசல் நுழைவு பகுதியிலிருந்து அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் பாதாள லிங்கத்தினை தரிசித்து விட்டு பெரிய நந்தி வழியாக பக்தர்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவர்கள்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும். குற்ற நிகழ்வகள் ஏதும் நடைபெறாமல் இருக்க பக்தர்கள் பொது மக்களின் பாதுகாப்பிற்காக 5000 - க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
14 கி.மீ கிரிவலப்பாதையில் தூய்மையான முறையில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், திருவண்ணாமலை வருவாய் அலுவலர் மந்தாகினி, அருணாசலேசுவரர் கோவில் செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- மாவட்டம் முழுவதும் தீவிர கள்ள சாராயம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்
- சாராய கும்பலை தேடும் பணி தீவிரம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.கார்த்தி கேயன் உத்தரவுப்படி, மதுவிலக்கு அமலாக்க ப்பிரிவு டி.எஸ்.பி.ரமே ஷ்ராஜ் மேற்பார்வையில், மாவட்டம் முழுவதும் தீவிர கள்ள சாராயம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தானிப்பாடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தட்டரணை காட்டுப்பகுதி, தச்சம்பட்டு எல்லைக்குட்பட்ட மூஞ்சுராம்பட்டு மற்றும் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்பக்காடு தன்னீர்பாரை ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்து 350 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் சுமார் 170 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும் தலைமறைவாகி உள்ள சாராய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லை யில் ஈடுபட்ட அவலம்
- ஜெயிலில் அடைப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள டி.கல்லேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளி தலைமை ஆசிரியராக மீனாசாந்தி மேரி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சி.லட்சுமணன் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லை யில் ஈடுபட்டு ள்ளதாக கூறப்படுகிறது.
மிரட்டி அத்துமீறல்
மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடித்துள்ளார். இது குறித்து மாணவிகள் பெற்றோ ர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பெண் அலுவலர் புவனேஸ்வரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதில் ஆசிரியர் மாணவிகளை தொடுவது மிரட்டி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின்னர் இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார்.அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.இதனையறிந்த ஆசிரியர் லட்சுமணன் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.பின்னர் நடந்த விசாரணைக்கு பிறகு அவரை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்தனர்.
- சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அக்னி வசந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக பாரத சொற்பொழிவு நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை திரவுபதி அம்மனுக்கு பால் இளநீர் தேன் சந்தனம் மஞ்சள் போன்ற விசேஷ திரையவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அர்ஜுனர், திரவுபதி அம்மன் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.
திருவிழாவில் வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
போளூர்:
போளூர் அருகே கேளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார், ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார், மாவட்ட செயலாளர் வேலாயுதம் அனைவரையும் வரவேற்றார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு குறித்து தமிழக முதல்வருக்கு வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் ஒரு லட்சம் கடிதம் அனுப்புவது.
அனைத்து கடைகளின் பெயர் பலகை தமிழில் வைக்கக் அன்போடு கோருதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் போளூர் நகர செயளாலர் கே.சி. குமரன், ஒன்றிய செயலாளர் துரை ராஜ், விஜயன், பாபு, தினேஷ், பரத், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
- உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடந்தது
- 150 நூலக புத்தகத்தை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கினார்
போளூர்:
உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஜமுனாமரத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பண்டிரேவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் ரங்கநாதன் மாணவர்களுடைய வாசிப்பு திறனை அதிகரிக்க 150 நூலக புத்தகத்தை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் மன்னர்சாமி, பள்ளி கல்வி குழு தலைவர் கீதா, ஊர் தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
- கார் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல் பாலூர் கொல்லக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 40).இவர் ஆரணியில் கோணிப்பை தைக்கும் வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி ராஜேஸ்வரி (35). நேற்று காலை கணவன் மனைவி இருவரும் பைக்கில் ஆரணிக்கு வேலைக்கு சென்றனர்.
மாலை வேலை முடிந்து மீண்டும் இருவரும் தங்களது சொந்த ஊருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.போளூரில் இருந்து செங்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தென் மாதிமங்கலம் என்ற இடத்தில் வந்த போது கரூரில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற கார் எதிர்ப்பாராக விதமாக பைக்கின் மீது மோதியது.
இதில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த இருவருமே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பைக் மீது மோதிய வேகத்தில் அருகில் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் வெங்கடேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணி பர்ஸ் உள்ளிட்டவைகளில் இருந்த 20 பவுன் நகையை திருடி சென்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆராசூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை. ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்.
இவரது மகன் விஜயன் (வயது 41) அவரது மனைவி வித்யா. நேற்று இரவு குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு வீட்டின் பின்பக்க கதவை நைசாக திறந்து வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்தனர்.
பீரோவில் இருந்த மணி பர்ஸ் பைகளை எடுத்துக் கொண்டு பின்பக்கம் உள்ள தோட்டத்திற்கு சென்றனர்.
அங்கு சாவகாசமாக அமர்ந்து மணி பர்ஸ் உள்ளிட்டவைகளில் இருந்த 20 பவுன் நகையை திருடி சென்றனர்.
இன்று காலை கண் விழித்த குடும்பத்தினர். வீட்டில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசில் விஜயன் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிதறி கிடந்த பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் துறை நிபுணர்கள் வந்து பீரோவில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள டி.கல்லேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளி தலைமை ஆசிரியராக மீனாசாந்தி மேரி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சி.லட்சுமணன் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடித்துள்ளார். இது குறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பெண் அலுவலர் புவனேஸ்வரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
இதில் ஆசிரியர் மாணவிகளை தொடுவது மிரட்டி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின்னர் இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இதனையறிந்த ஆசிரியர் லட்சுமணன் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






