என் மலர்
நீங்கள் தேடியது "Eradication of alcoholism"
- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் கிராமிய தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் பேரில் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிெரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப் இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், குணசேகரன் உள்ளிட்ட போலீசார் நேற்று குடியாத்தம் ஊராட்சி பூங்குளம் மலைப்பகுதி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சோதனை நடத்தினர்.
அப்போது சிலர் அடுப்புகள் வைத்து சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது இதனையடுத்து போலீசார் சாராயம் காய்ச்சிய அடுப்புகளை உடைத்து அகற்றினர் மேலும் அங்கு 4 பேரல்களில் இருந்த 500 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் காய்ச்சியவர்களை தேடி வருகின்றனர்.
- மாவட்டம் முழுவதும் தீவிர கள்ள சாராயம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்
- சாராய கும்பலை தேடும் பணி தீவிரம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.கார்த்தி கேயன் உத்தரவுப்படி, மதுவிலக்கு அமலாக்க ப்பிரிவு டி.எஸ்.பி.ரமே ஷ்ராஜ் மேற்பார்வையில், மாவட்டம் முழுவதும் தீவிர கள்ள சாராயம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தானிப்பாடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தட்டரணை காட்டுப்பகுதி, தச்சம்பட்டு எல்லைக்குட்பட்ட மூஞ்சுராம்பட்டு மற்றும் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்பக்காடு தன்னீர்பாரை ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்து 350 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் சுமார் 170 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும் தலைமறைவாகி உள்ள சாராய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- 10-க்கும் மேற்பட்ட போலீசார் வெள்ளைக்கல் மலையில் வேட்டை நடத்தினர்
- வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த சிவநாதபுரம் அருகே உள்ள வெள்ளைக்கல் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 10-க்கும் மேற்ப்பட்ட போலீசார் நேற்று வெள்ளைக்கல் மலையில் சாராய வேட்டை நடத்தினார். போலீசாரை கண்டம் தப்பி ஓட முயன்றவரை, போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாராயம் காய்ச்சியதும் தெரிந்தது.
இதனையடுத்து போலீசார் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் மற்றும் வெல்லம் உள்ளிட்ட பொருட்களை கீழே கொட்டி அழித்தனர். இதனை அடுத்து போலீசார் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கண்டுபிடிப்பு
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகு தியை ஒட்டியுள்ள மலைப்பகுதியான மாதகடப்பா காப்புக்காடு பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக, வாணியம்பாடி வனச்சரக அலுவலர் இளங்கோவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாதகடப்பா பிரிவு வானவர் வெங்கடேசன் தலைமையிலான வனத்துறை யினர் வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, அடர்ந்த வனப்பகுதியில், 250 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்தனர். இதைய டுத்து, சாராய ஊறல்களை கீழே ஊற்றி அழித்த வனத் துறையினர், தப்பிச்சென்ற குற்றவாளிகள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






