250 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கண்டுபிடிப்பு போலீசார் விசாரணை
250 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
Published on

வாணியம்பாடி:

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகு தியை ஒட்டியுள்ள மலைப்பகுதியான மாதகடப்பா காப்புக்காடு பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக, வாணியம்பாடி வனச்சரக அலுவலர் இளங்கோவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாதகடப்பா பிரிவு வானவர் வெங்கடேசன் தலைமையிலான வனத்துறை யினர் வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது, அடர்ந்த வனப்பகுதியில், 250 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்தனர். இதைய டுத்து, சாராய ஊறல்களை கீழே ஊற்றி அழித்த வனத் துறையினர், தப்பிச்சென்ற குற்றவாளிகள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com