என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வந்தவாசி அருகே ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
  X

  வந்தவாசி அருகே ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணி பர்ஸ் உள்ளிட்டவைகளில் இருந்த 20 பவுன் நகையை திருடி சென்றனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

  வந்தவாசி:

  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆராசூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை. ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்.

  இவரது மகன் விஜயன் (வயது 41) அவரது மனைவி வித்யா. நேற்று இரவு குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

  நள்ளிரவு வீட்டின் பின்பக்க கதவை நைசாக திறந்து வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்தனர்.

  பீரோவில் இருந்த மணி பர்ஸ் பைகளை எடுத்துக் கொண்டு பின்பக்கம் உள்ள தோட்டத்திற்கு சென்றனர்.

  அங்கு சாவகாசமாக அமர்ந்து மணி பர்ஸ் உள்ளிட்டவைகளில் இருந்த 20 பவுன் நகையை திருடி சென்றனர்.

  இன்று காலை கண் விழித்த குடும்பத்தினர். வீட்டில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

  இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசில் விஜயன் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிதறி கிடந்த பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

  மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் துறை நிபுணர்கள் வந்து பீரோவில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×