என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • கொள்ளை கும்பலை பிடிக்க கேமராக்கள் ஆய்வு
    • பீரோ உடைத்து துணிகரம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா துர்க்கை நம்மியந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன், விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் அவரது வீட்டில் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு மர்ம கும்பல் நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 33 பவுன் நகை, 200 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பினர்.

    நேற்று அதிகாலை மாடியில் இருந்து இறங்கி வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆனந்தன் அதிர்ச்சி அடைந்தார். பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் நேரில் வந்து சோதனை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். திருடப்பட்ட நகை,பணத்தின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

    • ஜெயிலில் அடைக்கப்பட்டனர்
    • கேமரா காட்சியால் சிக்கினர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கூட்டுச்சாலை அருகே பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் 2 பைக்கில் குடி போதையில் 5 பேர் வந்தனர் கும்பல், ஓசியில் பெட்ரோல் போடச் சொல்லி மிரட்டியது.

    இதற்கு மறுப்பு தெரிவித்த ஊழியர்களை போதை கும்பல் வெறித்தனமாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

    பெட்ரோல் பங்க் ஊழியர்களை கும்பல் தாக்கும் காட்சி அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் கேமராவில் பதிவாகி இருக்கும் போதை கும்பலை போலீசார் தேடினர்.

    இதன் மூலம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கொட்டை கிராமத்தை சேர்ந்த பார்த்தசாரதி (வயது26), (22) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்

    • நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க வேண்டும்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் பகுதியில் சாலையோரம் படவேடு செல்லும் இடத்துக்கு வழிகாட்டி பலகை சாலையோரம் சாய்ந்த நிலையில் உள்ளது.

    இதனை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கலெக்டர் முருகேஷ் தகவல்
    • திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கோடைக்கால பயிற்சிகள் நடைபெற உள்ளது. இதில் தடகளம், கூடைபந்து, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகள் ஆண்கள் பெண்களுக்கு மேற்கொள்ள ப்படவுள்ளது. மேற்காணும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் சான்று, ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், பார்ஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றினை வருகிற 1 - ந் தேதியன்று காலை 9 மணிக்கு நேரில் எடுத்து வரவேண்டும்.

    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவியர்கள். கல்லூரி முதலாம் ஆண்டு முதல் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவியர்கள் பங்கேற்களாம். கோடை கால பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவியர்களுக்கு பயணப்படி தினப்படி வழங்கப்படமாட்டாது.

    மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அலுவலரை 04175-233169 அல்லது 7401703484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • போளூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது
    • கிராம நிர்வாக அலுவலர் படுகொலைக்கு கண்டனம்

    போளூர்:

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்த பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுக்க சென்ற போது சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்ய ப்பட்டார்.

    அதனைக் கண்டித்து போளூர் தாலுகா அலுவலகமும் நேற்று இரவு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர்கள் மகாலிங்கம், மயிலரசன் உள்பட 20க்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • இந்த நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
    • பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடந்து வருகிறது.

    முதல் நாளான நேற்று கோவிலில் அண்ணாமலையார் உண்ணாமுலைஅம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள பன்னீர் மண்டபத்தில் சுவாமி அம்பாளுடன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளினர்.

    இதனை தொடர்ந்து அண்ணாமலையார் மகிழ மரத்தை 10 முறை தொடர்ந்து வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பொம்மை பூ போடும் வைபவம்

    அப்போது பாவை பொம்மை பூ போடும் வைபவம் நடந்தது.

    அண்ணாமலை யாரையும் உண்ணாமுலை அம்மனையும் சந்தோசப்படுத்தும் விதத்தில் பாவை வடிவிலான பொம்மை ஒவ்வொரு சுற்று முடிவிலும் பூ கொட்டியது.

    இந்த நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகின்ற 4-ந் தேதி வரை அண்ணாமலையார் உண்ணாமுலைஅம்மன் இரவு நேரங்களில் மூன்றாம் பிரகாரத்தில் 10 முறை வலம் வரும் உற்சவம் நடக்கிறது.

    • வளர்ச்சி பணிகள் ஆய்வு
    • இல்லம் தேடி கல்வி திட்டத்தை பார்வையிட்டார்

    போளூர்:

    போளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்படும் தொடக்கப்பள்ளியின் சமையலறைக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள் கலந்து கொண்டார்.

    மேலும் கல்பட்டு கிராமத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். புதிதாக கட்டப்படும் பள்ளி கட்டிடம், புதிய ரேஷன் கடை ஆகியவைகளை பார்வையிட்டார்.

    ஊராட்சிக்கு உட்பட்ட இரும்புலி கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை பார்வையிட்டார். அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரி லட்சுமி என்ஜினீயர் திவாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • போதை கும்பல் அட்டூழியம் கேமராவில் பதிவு
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே போதை கும்பல் இலவசமாக பெட்ரோல் கேட்டு பங்க் ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

    வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கூட்டுச்சாலை அருகே பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.இங்கு நேற்று 2 பைக்கில் குடி போதையில் 5 பேர் வந்தனர் கும்பல், ஓசியில் பெட்ரோல் போடச் சொல்லி மிரட்டியுள்ளது.

    இதற்கு மறுப்பு தெரிவித்த ஊழியர்களை போதை கும்பல் வெறித்தனமாக தாக்கினர்.பின்னர் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். பெட்ரோல் பங்க் ஊழியர்களை கும்பல் தாக்கும் காட்சி அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் கேமராவில் பதிவாகி இருக்கும் போதை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • மாமியார் வீட்டிற்கு பைக்கில் சென்றார்

    செய்யாறு:

    வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவரது மனைவி சரண்யா இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    பார்த்திபன் நேற்று தனது மாமியார் வீடான செய்யாறு அருகே உள்ள தாண்டுக்குளம் கிராமத்திற்கு மாமியார் வீட்டிற்கு பைக்கில் சென்றார்.

    அப்போது அணைக்கட்டு ரோட்டில் தாண்டுக்குளம் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் பார்த்திபன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் பார்த்திபன் தூக்கி வீசப்பட்டு இதில் பலத்த காயமடைந்தார்.

    பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக செய்யாறு மாவட்ட அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது குறித்து பார்த்திபனின் அண்ணன் மூர்த்தி செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • செங்கத்தில் 62.5 மி.மீ. பதிவு
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. ஜவ்வாதுமலை மற்றும் மலையடிவார கிராமங்களில் மழையின் தாக்கம் கூடுதலாக இருந்தது.

    ஜமுனாமரத்தூர் (ஜவ்வாது மலை) பகுதியில் அதிகபட்சமாக 65 மி.மீ., மழை பெய்துள்ளது. இதன் எதிரொலியாக, வறண்டு கிடந்த சுற்றுலா தலமான பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது.

    இதனைக் காண, சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். பீமன் நீர்வீழ்ச்சியை போன்று, மலை கிராமங்களில் உள்ள ஓடைகளிலும் தண்ணீரை காணமுடிகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி 27.44 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், ஆரணி பகுதியில் 62, செய்யாறு 26, செங்கம் 62.5, வந்தவாசி மற்றும் தண்டராம்பட்டு பகுதியில்2, போளூர் 27.2., திருவண்ணாமலை 18.3, கலசபாக்கம் 5, சேத்துப்பட்டு 1.6, கீழ்பென்னாத்தூர் 37.6, வெம்பாக்கம் 20மி.மீ., என மழை பெய்துள்ளது.

    • இது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும்.
    • 4-ந் தேதி மன்மத தகனம் நிகழ்ச்சி நடக்கிறது

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை வசந்த உற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் நேற்று மாலை கோவிலில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. இது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும்.

    விழாவையொட்டி சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பந்தக்காலிற்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் மங்கள வாத்தியங்கள் முழங்க நடப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. பின்னர் 3-ம் பிரகாரத்தில் மகிழ மரம் அருகில் உள்ள பன்னீர் மண்டபத்தில் அம்பாளுடன் சாமி எழுந்தருள பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவின் நிறைவாக வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் இரவு 10 மணியளவில் கோவிலில் கொடிமரம் அருகே மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • பலத்த மழையால் நடவடிக்கை
    • பொதுமக்கள் அவதி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் நேற்று இரவில் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    மழை விட்ட பின்னரும் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கண்ணமங்கலம், ஒண்ணுபுரம், சந்தவாசல், அம்மாபாளையம், வாழியூர் உள்ளிட்ட 75 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி கிடந்தது.

    கொசுக்களின் தொந்தரவு காரணமாக உழைக்கும் கிராம மக்கள் தூக்கம் இல்லாமல் 6 மணி நேரத்திற்க்கும் மேலாக தவியாய் தவித்து வந்தனர்.

    ×