என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்பட்டு கிராமத்தில் புதிய கட்டிடத்துக்கு பூமி பூஜை
- வளர்ச்சி பணிகள் ஆய்வு
- இல்லம் தேடி கல்வி திட்டத்தை பார்வையிட்டார்
போளூர்:
போளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்படும் தொடக்கப்பள்ளியின் சமையலறைக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள் கலந்து கொண்டார்.
மேலும் கல்பட்டு கிராமத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். புதிதாக கட்டப்படும் பள்ளி கட்டிடம், புதிய ரேஷன் கடை ஆகியவைகளை பார்வையிட்டார்.
ஊராட்சிக்கு உட்பட்ட இரும்புலி கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை பார்வையிட்டார். அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரி லட்சுமி என்ஜினீயர் திவாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story






