search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assault on staff"

    • போதை கும்பல் அட்டூழியம் கேமராவில் பதிவு
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே போதை கும்பல் இலவசமாக பெட்ரோல் கேட்டு பங்க் ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

    வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கூட்டுச்சாலை அருகே பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.இங்கு நேற்று 2 பைக்கில் குடி போதையில் 5 பேர் வந்தனர் கும்பல், ஓசியில் பெட்ரோல் போடச் சொல்லி மிரட்டியுள்ளது.

    இதற்கு மறுப்பு தெரிவித்த ஊழியர்களை போதை கும்பல் வெறித்தனமாக தாக்கினர்.பின்னர் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். பெட்ரோல் பங்க் ஊழியர்களை கும்பல் தாக்கும் காட்சி அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் கேமராவில் பதிவாகி இருக்கும் போதை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லப்பம்பட்டி அருகே சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது.
    • இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு மது போதையில் வந்த மின்னாம்பள்ளியை சேர்ந்த காலி பெட்ரோல் கேனில் டீசலை நிரப்புமாறு ஊழியர்களிடம் கூறினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லப்பம்பட்டி அருகே சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு மேலாளராக பாஸ்கர் என்பவரும், ஊழியர்களாக களங்கானியை சேர்ந்த ராம்குமார் (வயது 22), புதன் சந்தையை சேர்ந்த கவின் (25) ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு மது போதையில் வந்த மின்னாம்பள்ளியை சேர்ந்த சக்திவேல் (30) என்பவ,ர் காலி பெட்ரோல் கேனில் டீசலை நிரப்புமாறு ஊழியர்களிடம் கூறினார்.

    ஊழியர்கள் அந்த கேனில் டீசலை நிரப்பினர். அப்போது கேன் நிரம்பியதால் வேறு கேனை எடுத்து வருமாறு சக்திவேலிடம் ஊழியர்கள் தெரிவித்தனர். அதை ஏற்க மறுத்த சக்திவேல், கேனில் இருந்த டீசலை அகற்றிவிட்டு மறுபடியும் புதிதாக டீசல் நிரப்புமாறு கூறினார்.

    இதனால் அவர்களுக்கும் சக்திவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை அடுத்து சக்திவேல் தனது நண்பர்களை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைத்தார். உடனே அங்கு வந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும், ஊழியர்களான ராம்குமார், கவின், பாஸ்கர் ஆகியோரை கடுமையாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இதில் காயமடைந்த ஊழியர்கள் நாமக்கல்

    தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நல்லிபாளையம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சக்திவேல் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ×