கண்ணமங்கலம் பகுதியில் மின்சாரம் துண்டிப்பு

பலத்த மழையால் நடவடிக்கை பொதுமக்கள் அவதி
கண்ணமங்கலம் பகுதியில் மின்சாரம் துண்டிப்பு
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பகுதியில் நேற்று இரவில் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மழை விட்ட பின்னரும் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கண்ணமங்கலம், ஒண்ணுபுரம், சந்தவாசல், அம்மாபாளையம், வாழியூர் உள்ளிட்ட 75 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி கிடந்தது.

கொசுக்களின் தொந்தரவு காரணமாக உழைக்கும் கிராம மக்கள் தூக்கம் இல்லாமல் 6 மணி நேரத்திற்க்கும் மேலாக தவியாய் தவித்து வந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com