என் மலர்
திருவண்ணாமலை
- தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஜடேரி பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 24). இவரது நண்பர் மணிகண்டன்.
இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் நோக்கி நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திருப்பனங்காடு கிராமம் அருகே வந்த போது எதிரே வந்த தனியார் பஸ் விஜய் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் விஜய் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது
- சாலையோரம் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று அனைத்து சாலையோர வியாபாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், கண்ணமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக், துணை தலைவர் குமார், கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, வார்டு கவுன்சிலர்கள் உள்பட சாலையோரம் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் வருங்காலங்களில் பழைய ரோட்டில் குளம் அருகே காய்கறி கடைகள், பழக்கடைகள் வைத்து வியாபாரம் செய்வது உள்பட வியாபாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோவர்த்தனன் கூறுகையில்:- நடைபாதைக்கடைகள் வியாபாரிகள் ஒருவருக்கொருவர் இடைஞ்சலின்றி கடைகள் வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றார்.
- சக்தி படையாட்சி பேச்சு
- செய்யாறில் ஆர்ப்பாட்டம்
செய்யாறு:
செய்யாறு டவுன், ஆரணி கூட்ரோட்டில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த கோரி வன்னியர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட செயலாளர்சரவணன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, கன்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இணை பொது செயலாளர்ராஜா வரவேற்றார். நிறுவனத் தலைவர் சக்தி படையாட்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தி நடைமுறைக்கு வந்தது. தி.மு.க. அரசு தன் பின்புலத்தால் மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வன்னியர் மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் செய்தது. இதுவரை இந்த அரசு இட ஒதுக்கீடு கொண்டுவர எந்தவித முன்னெடுப்பு செய்யவில்லை.
அரசு உயர் பதவிகளில் வன்னியர்களுக்கு இடமே இல்லை.
வருகின்ற மே மாதம் 31-ந் தேதிக்குள் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.வருகின்ற கல்வி ஆண்டிலாவது உயர்கல்வி படிப்பதற்கும், அரசு பணியில் அதிக அளவில் வன்னிய மாணவ மாணவிகள் சேருவதற்கும் உதவியாக இருக்கும்.
இந்த அரசு இட ஒதுக்கீடு அமல்படுத்தாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்தால் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் நாங்கள் மிகப் பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் ேபசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சீனிவாசன், கோவிந்தராஜ், வழக்கறிஞர் ஜெய் ஹரி, கவிஞர் கணேசன், தீபம் சண்முகம், எல். கண்ணன், ஆனந்தன், அய்யப்பன், கே. விஜயகாந்த், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக மத்திய மாவட்ட செயலாளர் பரசுராமன் நன்றி கூறினார்.
- 3 நாட்கள் நடைபெறுகிறது
- போட்டிகளில் அதிக திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற முடியும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட விளையாட்டு சங்கம் மற்றும் அருணை மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்தும் 21-வது அருணை மருத்துவக்கல்லூரி தேசிய பெடரேஷன் கோப்பைக்கான ஜூனியர் தடகள போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது.
தேசிய ஜூனியர் தடகள போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான விளையாட்டு ஆடையை அறிமுகம் செய்த பின் டாக்டர் கம்பன் கூறியதாவது:-
திருவண்ணாமலையில் இன்று தொடங்கும் 21-வது தேசிய ஜூனியர் தடகள போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது.
16 வயது முதல் 20 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்வார்கள். தடகள போட்டிகள் காலை 6 மணிக்கு தொடங்கி 9.30 மணி வரையிலும், மாலை 3.30 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரையில் நடைபெறும். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு மாவட்ட தடகள சங்கம் சார்பில் பொற்கிழி வழங்கப்படும்.
தொடக்க விழா
இன்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக, திரைப்பட நடிகர் ஜீவா கலந்து கொள்கிறார். 30 -ந் தேதி மாலை நடைபெறும் நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் கலந்து கொள்கிறார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விளையாட்டு துறைக்கு ஏராளமான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
தடகள வீரர்கள் மலை பிரதேசத்தில் பயிற்சி பெற்று கடல் மட்ட அளவில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் போட்டிகளில் அதிக திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற முடியும்.
மத்திய அரசு தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களில் தடகள வீரர்களுக்கான பயிற்சி முகாம்களை அமைத்து தர வேண்டும் என தடகள சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.
ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்களை பதக்கம் வெல்ல வைப்பதே தடகள சங்கத்தின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தடகள சங்க மாநில செயலாளர் லதா, மாவட்ட செயலாளர் புகழேந்தி, ஆகியோர் உடன் இருந்தனர்.
- வண்ணாங்குளம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடு பகுதியில் உள்ள வண்ணாங்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தலை நேற்று ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், பொதுமக்கள் வசதிக்காக திறந்து வைத்தார்.
மாவட்ட செயலாளர் தூசி மோகன் முன்னிலை வகித்தார். மேற்கு ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கொளத்தூர் திருமால் வரவேற்று பேசினார்.
மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஜாகிர் உசேன், ஆரணி நகர கழக செயலாளர் அசோக் குமார், ஒன்றிய செயலாளர் வக்கீல் சங்கர், ஆரணி நகர மன்ற துணைத் தலைவர் பாரிபாபு, கண்ணமங்கலம் நகர கழக செயலாளர் பாண்டியன், அரையாளம் வேலு, மாவட்ட ஐடி விங் செயலாளர் சரவணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சரவண பாபு, மாவட்ட கலைப்பிரிவு பொருளாளர் குமார், மேல்நகர் ஊராட்சி மன்ற தலைவர் ரத்னா அன்பழகன், ஒன்றிய விவசாய பிரிவு சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வண்ணாங்குளம் கருணாகரன் நன்றி கூறினார்.
- எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்
- ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ந.கலைவாணி தலைமை தாங்கினார். வேதியியல் துறை இணைப் பேராசிரியர் வ.உமா வரவேற்று பேசினார்.
பேராசிரியர்கள் ரவிச்சந்திரன், மு.மணி, கு.கண்ணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம் எல் ஏ கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் ஒன்றிய செயலாளர் ஞானவேல் தினகரன் பார்த்திபன் சுந்தரேசன் ராம் ரவி மா கி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்
- வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்
செய்யாறு:
வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி அதே பகுதியில் பிளஸ் டூ படித்து தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். தென்கழனி பகுதியைச் சேர்ந்த வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
இச்சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் இது குறித்து மாணவியரின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
- நள்ளிரவில் இறங்கிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அடுத்த படவேடு ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள இருளம்பாறை பகுதியை சேர்ந்வர் நீதி (வயது 32) .
இவர் தனது வீட்டு மாடியில் கடந்த 21-ந் தேதி தூங்கிக்கொண்டு இருந்தார். நள்ளிரவு ஒரு மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மாடிப்படியில் இருந்து இறங்கினார்.
அப்போது படிக்கட்டில் கைப்பிடி இல்லாததால் தவறி கீேழ விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நீதியின் மனைவி சத்தியபிரியா சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த நீதிக்கு நிஷா (13) மேகா (6) என 2 மகள்களும், யுவக்குமார் (8) என்ற மகனும் உள்ளனர்.
- தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து இறந்தார்
- திருவிழாவுக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தார்
ஆரணி:
ஆரணி அடுத்த குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் தயாநிதி. இவர் சென்னையில் சினிமாவில் லைட் மேனாக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு சரண்யா என்ற மனைவியும் சரண்ராஜ் என்ற மகனும் உள்ளனர். திருவிழாவிற்காக தனது கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஆரணிக்கு சென்று காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது விண்ண மங்கலம் கூட்ரோடு அருகே வரும்போது முன்னால் சென்ற மினி ஆட்டோ சாலையில் வலது பக்கமாக திரும்பியது.
பின்னால் தயாநிதி ஒட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக மினி ஆட்டோ மீது மோதியது. இதில் அவர் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் தயாநிதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மாபாளையம் கிராமத்தில் புதிய தேர்
- ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்
கண்ணமங்கலம்:
வேலூர் மாவட்டம் கத்தாழம்பட்டு கிராமத்தில் காளியம்மன் தேர் பழுதடைந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறவில்லை.
தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் பழுதடைந்த தேர் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. நேற்று புதிய தேருக்கு பூஜை செய்து வெள்ளோட்டம் நடைபெற்றது.
இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதேபோல் கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் என்கிற அப்பநல்லூர் கிராமத்தில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
இந்த தேரை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
- கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
- 9 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவில் இன்னிசைக் கச்சேரி மேடையில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி 219 பயனாளிகளுக்கு ரூ. 13லட்சத்து 38ஆயிரத்து மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மேலும் 9 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 3 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.
முகாமிற்கு கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ., ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு வரவேற்று பேசினார்.
ஊட்டச்சத்து, கால்நடைத்துறை உள்பட பல்வேறு கண்காட்சிகளை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டார்.
இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள் சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மகாதேவன், மாறன், செந்தில்குமார், தனி தாசில்தார் செந்தில்குமார், படவேடு ரேணுகாம்பாள் கோவில் செயல் அலுவலர் சிவஞானம், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நடராஜன், படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணை தலைவர் தாமரை ச்செல்விஆனந்தன் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் நன்றி கூறினார்.
- 41 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்நகர் கிராமத்தில் காளைவிடும் திருவிழா நடைபெற்றது.
விழாவில் 150-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. பின்னர் சாலையில் அமைக்கப்பட்ட தடுப்புகள் வழியாக ஓடவிடப்பட்டது. இதில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற கீழ் வல்லம் காளைக்கு ரொக்கப் பரிசு ரூ.50 ஆயிரம் உள்பட 41 காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக வாடி வாசல் வழியாக காளைகளை ஊராட்சி மன்ற தலைவர் ராணிதண்டபாணி, முன்னாள் தலைவர் ஏழுமலை ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
இதில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






