என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாடிப்படியில் இருந்து கீழே விழுந்து வாலிபர் சாவு
- நள்ளிரவில் இறங்கிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அடுத்த படவேடு ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள இருளம்பாறை பகுதியை சேர்ந்வர் நீதி (வயது 32) .
இவர் தனது வீட்டு மாடியில் கடந்த 21-ந் தேதி தூங்கிக்கொண்டு இருந்தார். நள்ளிரவு ஒரு மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மாடிப்படியில் இருந்து இறங்கினார்.
அப்போது படிக்கட்டில் கைப்பிடி இல்லாததால் தவறி கீேழ விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நீதியின் மனைவி சத்தியபிரியா சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த நீதிக்கு நிஷா (13) மேகா (6) என 2 மகள்களும், யுவக்குமார் (8) என்ற மகனும் உள்ளனர்.






