என் மலர்
உள்ளூர் செய்திகள்

குளத்து மேடு பகுதியில் கடைகள் வைக்க அனுமதி
- கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது
- சாலையோரம் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று அனைத்து சாலையோர வியாபாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், கண்ணமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக், துணை தலைவர் குமார், கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, வார்டு கவுன்சிலர்கள் உள்பட சாலையோரம் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் வருங்காலங்களில் பழைய ரோட்டில் குளம் அருகே காய்கறி கடைகள், பழக்கடைகள் வைத்து வியாபாரம் செய்வது உள்பட வியாபாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோவர்த்தனன் கூறுகையில்:- நடைபாதைக்கடைகள் வியாபாரிகள் ஒருவருக்கொருவர் இடைஞ்சலின்றி கடைகள் வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றார்.






