கத்தாழம்பட்டு தேர் வெள்ளோட்டம்

அம்மாபாளையம் கிராமத்தில் புதிய தேர் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்
கத்தாழம்பட்டு தேர் வெள்ளோட்டம்
Published on

கண்ணமங்கலம்:

வேலூர் மாவட்டம் கத்தாழம்பட்டு கிராமத்தில் காளியம்மன் தேர் பழுதடைந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறவில்லை.

தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் பழுதடைந்த தேர் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. நேற்று புதிய தேருக்கு பூஜை செய்து வெள்ளோட்டம் நடைபெற்றது.

இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

இதேபோல் கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் என்கிற அப்பநல்லூர் கிராமத்தில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

இந்த தேரை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com