என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
    X

    வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

    • சக்தி படையாட்சி பேச்சு
    • செய்யாறில் ஆர்ப்பாட்டம்

    செய்யாறு:

    செய்யாறு டவுன், ஆரணி கூட்ரோட்டில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த கோரி வன்னியர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாவட்ட செயலாளர்சரவணன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, கன்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில இணை பொது செயலாளர்ராஜா வரவேற்றார். நிறுவனத் தலைவர் சக்தி படையாட்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தி நடைமுறைக்கு வந்தது. தி.மு.க. அரசு தன் பின்புலத்தால் மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வன்னியர் மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் செய்தது. இதுவரை இந்த அரசு இட ஒதுக்கீடு கொண்டுவர எந்தவித முன்னெடுப்பு செய்யவில்லை.

    அரசு உயர் பதவிகளில் வன்னியர்களுக்கு இடமே இல்லை.

    வருகின்ற மே மாதம் 31-ந் தேதிக்குள் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.வருகின்ற கல்வி ஆண்டிலாவது உயர்கல்வி படிப்பதற்கும், அரசு பணியில் அதிக அளவில் வன்னிய மாணவ மாணவிகள் சேருவதற்கும் உதவியாக இருக்கும்.

    இந்த அரசு இட ஒதுக்கீடு அமல்படுத்தாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்தால் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் நாங்கள் மிகப் பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் ேபசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் சீனிவாசன், கோவிந்தராஜ், வழக்கறிஞர் ஜெய் ஹரி, கவிஞர் கணேசன், தீபம் சண்முகம், எல். கண்ணன், ஆனந்தன், அய்யப்பன், கே. விஜயகாந்த், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இறுதியாக மத்திய மாவட்ட செயலாளர் பரசுராமன் நன்றி கூறினார்.

    Next Story
    ×