என் மலர்
திருவண்ணாமலை
- விவசாயி கைது
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அருகில் உள்ள கீழ்சிறுபாக்கம் ஊராட் சிக்குட்பட்ட தண்ணீர்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் நட ராஜன் (வயது 70), விவசாயி.
இவர் கடந்த 27-ந் தேதி இரவு தனது மனைவி மனோன் மணி என்பவரிடம் நிலத் திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் நடராஜன் கிடைக்காத நிலை யில் தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்பரது விவசாய கிணற்றில் நடராஜன் பிணமாக மீட்கப்பட்டார்.
நடராஜனின் உடலில் வலது கால் பகுதியில் ரத்த காயங்கள் இருந்ததால் போலீசார் சந்தேகப்பட்டு விசா ரணை நடத்தினர்.
விசாரணையில் பக்கத்து நிலத்துக்காரரான ஏழுமலை (50) என்பவர் தனது நிலத்தில் பயிரிட்டு இருந்த மணிலா, மரவள்ளி கிழங்கு, நெல் போன்ற பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்ப டுத்துவதை தடுப்பதற்காக மின்வேலி அமைத்துள்ளார்.
இந்த மின்வேலியில் சிக்கி நடராஜன் இறந்தார். போலீ சுக்கு தெரியாமல் இதனை மறைப்பதற்காக, கிணற்றில் பிணத்தை ஏழுமலை வீசியது தெரியவந்தது.
இதையடுத்து ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். மேலும் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் பதக்கங்களை வழங்கினார்
- 40 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து 21-வது தேசிய அளவிலான இளையோர் தடகளப்போட்டியை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தியது. இந்த போட்டி கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.
இதில் 28 மாநிலங்களில் இருந்து 950-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பகல், இரவாக நடைபெற இப்போட்டியில் 100 மீட்டர், 500 மீட்டர், 1500 மீட்டர் உள்ளிட்ட ஓட்ட பந்தையங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல் என்பன உள்ளிட்ட 40 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிக்கான நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கி பேசினார்.
மாநில தடகள சங்க செயலாளர் லதா முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களை வழங்கி பேசினார்.
விழாவில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி, அருணை கன்ஸ்ட்ரக்ஷன் வெங்கட், பிரியா விஜயரங்கன், சேஷாத்திரி உள்பட நடுவர்கள், வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்த தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் 4 பேர் புதிய சாதனை படைத்து உள்ளனர்.
ஆண்கள் பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் போட்டியில் உத்தரபிரதேஷத்தை சேர்ந்த ஷாருக்கான என்பவர் 9 நிமிடம் 5 விநாடியில் தடைகளை தாண்டியுள்ளார்.
அதேபோல் ஆண்கள் பிரிவில் கோல் ஊன்றி தாண்டுதல் போட்டியில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த தேவ்மீனா என்பவர் 5 மீட்டர் தாண்டினார்.
பெண்கள் பிரிவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த புஷர்கான்கவுரி என்பவர் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தை 9 நிமிடம் 35 விநாடியில் ஓடியும், மகராஷ்டிராவை சேர்ந்த அனுஷ்கா தாதர்கும்பா என்பவர் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 1 நிமிடத்தில் ஓடியும் புதிய சாதனையை படைத்து உள்ளனர்.
- 4-ந்தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
- 4-ந்தேதி இரவு 10 மணியளவில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை வசந்த உற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் கடந்த 24-ந் தேதி மாலை கோவிலில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. இது 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும்.
விழாவையொட்டி கடந்த 25-ந் தேதி முதல் வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) வரை காலையில் அருணாசலேஸ்வருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், இரவில் 3-ம் பிரகாரத்தில் மகிழ மரம் அருகில் உள்ள பன்னீர் மண்டபத்தில் அம்பாளுடன் சாமி எழுந்தருளி பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் முக்கிய நிகழ்வான 5-ம் விழாவான நேற்று முன்தினம் இரவு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி மற்றும் ஒளிவு உற்சவம் நடந்தது.
சிவபெருமான் ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் போது உலகில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் நின்று இருள் சூழ்ந்து விடுவதால் அந்த தியானத்தை கலைப்பதற்காக தேவர்கள் மன்மதனை சாமி மீது அம்பு விட அனுப்பி வைக்கின்றனர். மன்மதன் இருளில் மறைந்து இருக்கும் சிவபெருமானை 2 முறை தேடி அம்பு விட முயற்சி செய்யும் நிகழ்வே ஒளிவு உற்சவம் என்று கூறப்படுகிறது.
இந்த ஒளிவு உற்சவத்தை யொட்டி அம்பாளுடன் சாமி வண்ண மலர்களால் ஆன சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் மன்மதன் சாமியை தேடுவது போன்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சாமி மீது பொம்மை போடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.
சித்திரை வசந்த உற்சவத்தின் நிறைவாக வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் இரவு 10 மணியளவில் கோவிலில் கொடிமரம் அருகே மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
- சேலத்தில் ஒரு கிராமத்தில் அமைக்கப்பட்ட ஸ்டேடியம் மாதிரி அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் அமைக்க அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
- சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்து 7 நாட்கள் தான் ஆகிறது. நானும் அடுத்தடுத்த பயணங்களில் இருக்கிறேன்.
திருச்சி:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் திருச்சி தூய வளனார் கல்லூரி மைதானத்தில் எங்கள் முதல்வர், எங்கள் பெருமை என்ற தலைப்பில் தமிழக முதல்வரின் வரலாற்று புகைப்பட கண் காட்சியை கடந்த 23-ந்தேதி நடிகர் பிரபு திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து கண்காட்சி நிறைவு நாளான இன்று தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தலைவர் மு.க.ஸ்டாலின் வரலாற்றை சொல்லும் இந்த புகைப்பட கண்காட்சி சென்னையில் முதலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் மதுரை, கோவையில் நடந்தது. இப்போது திருச்சியில் 9 நாட்களாக நடைபெற்று இருக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள். அமைச்சர் நேரு கடைசி நாளில் நீங்கள் வந்து பார்வையிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று இன்று பார்வையிட வந்தேன்.
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரு அனுபவம் ஏற்படுகிறது. இது தலைவரின் 50 ஆண்டு கால உழைப்பு. முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் உழைப்பு, உழைப்பு என பாராட்டு பெற்றவர் நமது தலைவர். அந்த உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக சான்றாக இந்த கண்காட்சி விளங்குகிறது இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள் ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது.
சிறப்பான ஏற்பாடுகளை செய்து அமைச்சர் நேரு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், எந்த சவாலையும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். காங்கிரஸ் கொண்டு வந்த மிசாவுக்கும், தற்போதைய பா.ஜ.க. அரசு நடத்தும் வருமான வரித்துறை சோதனைக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் 31 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அடுத்த வருடத்திற்குள் பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்படும்.
சேலத்தில் ஒரு கிராமத்தில் அமைக்கப்பட்ட ஸ்டேடியம் மாதிரி அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் அமைக்க அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்து 7 நாட்கள் தான் ஆகிறது. நானும் அடுத்தடுத்த பயணங்களில் இருக்கிறேன். ஒவ்வொரு அறிவிப்பும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் பார்வையிட்டனர்.
- பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படுகின்றன.
- 5000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் சித்ரா பௌவுர்ணமியையொட்டி வருகிற 4,5-ந்தேதிகளில் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இலவச தரிசனம், ரூ.50-க்கான சிறப்பு தரிசனம் என 2 பிரிவுகளாக செல்லும் வகையில் தடுப்புகள் வைக்கப்பட உள்ளன.
ராஜகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், பேகோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் பகுதிகளில் பக்தர்கள் செல்ல தூய்மை பணிகள் நடக்கிறது.
கோவிலை சுற்றி ஆட்டோ, சுற்றுலா வாகனங்கள், பஸ்கள் ஆகியவை நிறுத்த அனுமதியில்லை. சாலையோர சிறுவணிகர்கள் அனுமதி மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமே சிறு வணிக கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டு திட்டிவாசல் நுழைவு பகுதியிலிருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படுகின்றன.
5000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் வசதி குறித்து இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.
துணை சபாநாயகர் பிச்சாண்டி கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணை தலைவர் கம்பன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் உட்பட பலர் உடனிருந்தனர்.
14 கி.மீ கிரிவலப்பாதையில் தூய்மையான முறையில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
- தபசு மரம் ஏறி சிவபெருமானிடம் அம்பு வாங்கும் நிகழ்ச்சி நடத்தி காண்பிக்கப்பட்டது
- பொதுமக்கள் ஏராளமானோர் தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் பாரதத் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பாரத சொற்பொழிவு நடைபெற்று வந்த நிலையில் அர்ஜுனன் தபசு விழா நடைபெற்றது.
பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனர் தவமிருந்து தபசு மரம் ஏறி சிவபெருமானிடம் அம்பு வாங்கும் நிகழ்ச்சி நடத்தி காண்பிக்கப்பட்டது.
இந்த திருவிழாவை வந்தவாசி சுற்றியுள்ள சென்னாவரம், பிருதூர், கடைசிகுளம், புன்னை, கல்லாங்குத்து உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
- ஜெயிலில் அடைத்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா களஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த மோகன்தாஸ் (வயது 32), கீழ்பென்னாத்தூர் தாலுகா பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (39) இருவரும் சாராய விற்பனை செய்து வந்தனர்.
செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் தொடர்ந்து சட்டவிரேத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலெக்டர் முருகேஷிற்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் மோகன்தாஸ், ஏழுமலை ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
- எருமை வெட்டி அரசு பள்ளியில் வழங்கப்பட்டது
- ஓ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியம், எருமைவெட்டி அரசு நடுநிலை பள்ளியி லிருந்து அனப்பத்தூர் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்காக புதிய சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சு.பெருமாள் வரவேற்றார்.
ஒ.ஜோதி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தலைமை ஆசிரியர் பெருமாள் தனது சொந்த செலவில் ரூபாய் 55 ஆயிரம் மதிப்பில் ஏற்பாடு செய்திருந்த 10 சைக்கிள்களை மாணவ மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. வழங்கினார்.
விழாவில் ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ரவிக்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- யார்? என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள காழியூர் கிராமத்தில் அத்தி செல்லும் சாலையில் சிறிய பாலம் உள்ளது.
இந்த பாலத்திற்கு அடியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
தகவல் அறிந்து காழியூரில் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் சம்பவ இடம் சென்று பார்த்தார்.
இதுகுறித்து செய்யாறு போலீசில் புகார் செய்தார்.
செய்யாறு போலீசார் உடலை மீட்டு இறந்தவர் என்ன காரணத்துக்காக இறந்து கிடந்தார்.
எந்த ஊரை சேர்ந்தவர் காணாமல் போனவர் பட்டியலில் இறந்த நபர் இருக்கின்றாரா என்ற பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
- பஸ் சுங்க வரி வசூல் ஏலம் யாரும் எடுக்காத நிலையில், சுங்கவரி மட்டும் பேரூராட்சி நிர்வாகம் பணியாளர் மூலம் வசூல் செய்து வருகிறது
- போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் பஸ் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சி சார்பில் எவ்வித வாகன நிறுத்துமிடம் இல்லை என்பதால் இங்கு வரும் பயணிகள், பொதுமக்கள் போக்குவரத்துத்துக்கு இடைஞ்சலாக அவரவர் விருப்பப்படி வாகனங்கள் நிறுத்திவிடுகின்றனர்.
இந்த பஸ் நிலையத்தில் வெளிப்புறம் உள்ள சிமெண்ட் தளத்தில் சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள்.
இந்த பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் அனைத்து பஸ்களுக்கும் சுங்க வரி வசூல் பேரூராட்சி பணியாளர் மூலம் செய்து வருகின்றனர்.
சுங்க வரி வசூல் செய்யும் பேரூராட்சி, இங்கு வரும் பயணிகள் உள்பட பொதுமக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகள் கூட பஸ் நிலையத்தில் இல்லை. அனைத்து பஸ்களும் வேலூர்- திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடு பகுதியில் நின்று செல்வதால், பயணிகள் வெயில் மழையில் காத்திருந்து பயணம் செய்கின்றனர்.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்:-
பஸ்கள் நிலையத்தில் உள்ளே வந்து நின்று செல்ல போலீசார்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் பஸ் சுங்க வரி வசூல் ஏலம் யாரும் எடுக்காத நிலையில், சுங்கவரி மட்டும் பேரூராட்சி நிர்வாகம் பணியாளர் மூலம் வசூல் செய்து வருகிறது.
எனவே உரிய முறையில் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் பஸ்கள் பஸ் நிலையம் பகுதியில் உள்ளே வந்து நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- 8 ஆயிரத்து 600 சதுர அடி இடம் உள்ளது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
இவற்றில் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை துராபலி தெருவில் உள்ள வல்லப விநாயகர் கோவில் பின்புறம் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 8 ஆயிரத்து 600 சதுர அடி இடம் உள்ளது.
இந்த இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்தும், கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை பல வருடங்களாக செலுத்தா மலும் இருந்து வந்தனர்.
இதுகுறித்து கோர்ட்டு அமினாக்கள் முன்னிலையில் அந்த இடம் மீட்கப்பட்டு கோவில் இணை ஆணையர் குமரேசனிடம் ஒப்படைக்க ப்பட்டது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கடைகளில் இருந்து பொருட்களை கோவில் ஊழியர்கள் அப்புறப்ப டுத்தினர். அதன்பிறகு கடை உரிமையாளர்களே பொருட்களை எடுத்து சென்றனர். அதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
மீட்கப்பட்ட இந்த இடத்தை அருணா சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சீர்படுத்த வேண்டும். பக்தர்கள் பயன்பாட்டிற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- ஒழுக்கம் இருந்தால் இலக்கை அடையலாம்
- நடிகர் ஜீவா பேச்சு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் நடத்தும் 21-வது தேசிய அளவிலான இளையோர் தடக ளப்போட்டி திருவண்ணா மலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கி பேசினார்.
துரோணாச்சார்யார் விருது பெற்ற ரமேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், அருணை மருத்து வக்கல்லூரி டீன் குணசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தடகள சங்க செயலாளர் லதா வரவேற்று பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நடிகர் ஜீவா
விழாவில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் ஜீவா கலந்து கொண்டு போட்டிக்கான ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். அவர் பேசியதாவது:-
தமிழக விளையாட்டு வீரர்கள் ஆசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர்.
இந்திய அணியில் தமிழக வீரர்கள் அதிகளவில் இடம் பெறுகின்றனர். தடகள சங்கம் சார்பில் மேலும் இது போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தி தடகள வீரர்களை உருவாக்க வேண்டும். இதற்கு திரை துறையின் சார்பில் எப்பொழுதும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.
விளையாட்டு வீரர்களுக்கு அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் தற்போது கிடைத்து வருகின்றது. விளையாட்டு வீரர்கள் சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதிகளவில் டி.வி.யையும், செல்போனையும் பார்க்கக் கூடாது.
இலக்கு அடையலாம்
உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உறுதி ஆகியவை இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம். இந்த நாள் திரும்பவும் வராது. இந்த நாட்களை அனுபவித்து வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஜூன் மாதத்தில் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் இந்திய அணியின் சார்பில் பங்கேற்க புள்ளிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.






