என் மலர்
நீங்கள் தேடியது "அர்ஜுனன் தபசு"
- தபசு மரம் ஏறி சிவபெருமானிடம் அம்பு வாங்கும் நிகழ்ச்சி நடத்தி காண்பிக்கப்பட்டது
- பொதுமக்கள் ஏராளமானோர் தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் பாரதத் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பாரத சொற்பொழிவு நடைபெற்று வந்த நிலையில் அர்ஜுனன் தபசு விழா நடைபெற்றது.
பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனர் தவமிருந்து தபசு மரம் ஏறி சிவபெருமானிடம் அம்பு வாங்கும் நிகழ்ச்சி நடத்தி காண்பிக்கப்பட்டது.
இந்த திருவிழாவை வந்தவாசி சுற்றியுள்ள சென்னாவரம், பிருதூர், கடைசிகுளம், புன்னை, கல்லாங்குத்து உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மகாபாரத திருவிழாவையொட்டி நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா காம்பட்டு கிராமத்தில் மகாபாரத திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நாடக நடிகர்கள் அர்ஜுனன் வேடமிட்டு சிறப்பு நாடகத்தை நடத்தினார்.
இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி விரதமிருந்து ஈரத்துணியுடன் வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.






