search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலையில் மீட்கப்பட்ட கோவில் இடத்தை பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
    X

    திருவண்ணாமலையில் மீட்கப்பட்ட கோவில் இடத்தை பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • 8 ஆயிரத்து 600 சதுர அடி இடம் உள்ளது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

    இவற்றில் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலை துராபலி தெருவில் உள்ள வல்லப விநாயகர் கோவில் பின்புறம் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 8 ஆயிரத்து 600 சதுர அடி இடம் உள்ளது.

    இந்த இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்தும், கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை பல வருடங்களாக செலுத்தா மலும் இருந்து வந்தனர்.

    இதுகுறித்து கோர்ட்டு அமினாக்கள் முன்னிலையில் அந்த இடம் மீட்கப்பட்டு கோவில் இணை ஆணையர் குமரேசனிடம் ஒப்படைக்க ப்பட்டது.

    அப்போது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கடைகளில் இருந்து பொருட்களை கோவில் ஊழியர்கள் அப்புறப்ப டுத்தினர். அதன்பிறகு கடை உரிமையாளர்களே பொருட்களை எடுத்து சென்றனர். அதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    மீட்கப்பட்ட இந்த இடத்தை அருணா சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சீர்படுத்த வேண்டும். பக்தர்கள் பயன்பாட்டிற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×