என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி வாலிபர் சாவு
- போலீசார் விசாரணை
- மாமியார் வீட்டிற்கு பைக்கில் சென்றார்
செய்யாறு:
வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவரது மனைவி சரண்யா இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
பார்த்திபன் நேற்று தனது மாமியார் வீடான செய்யாறு அருகே உள்ள தாண்டுக்குளம் கிராமத்திற்கு மாமியார் வீட்டிற்கு பைக்கில் சென்றார்.
அப்போது அணைக்கட்டு ரோட்டில் தாண்டுக்குளம் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் பார்த்திபன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் பார்த்திபன் தூக்கி வீசப்பட்டு இதில் பலத்த காயமடைந்தார்.
பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக செய்யாறு மாவட்ட அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்து விட்டார்.
இது குறித்து பார்த்திபனின் அண்ணன் மூர்த்தி செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






