பைக் மீது கார் மோதி கணவன், மனைவி பலி

2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் கார் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பைக் மீது கார் மோதி கணவன், மனைவி பலி
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல் பாலூர் கொல்லக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 40).இவர் ஆரணியில் கோணிப்பை தைக்கும் வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி ராஜேஸ்வரி (35). நேற்று காலை கணவன் மனைவி இருவரும் பைக்கில் ஆரணிக்கு வேலைக்கு சென்றனர்.

மாலை வேலை முடிந்து மீண்டும் இருவரும் தங்களது சொந்த ஊருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.போளூரில் இருந்து செங்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தென் மாதிமங்கலம் என்ற இடத்தில் வந்த போது கரூரில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற கார் எதிர்ப்பாராக விதமாக பைக்கின் மீது மோதியது.

இதில் கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த இருவருமே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பைக் மீது மோதிய வேகத்தில் அருகில் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் வெங்கடேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com