என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் தீவிரம்
    X

    அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் தீவிரம்

    • 20 லட்சம் பக்தர்கள் வருகை
    • கலெக்டர் முருகேஷ் ஆய்வு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் சித்ரா பவுணர்மியையொட்டி வருகிற 4,5-ந்தேதிகளில் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு இலவச தரிசனம், ரூ.50 - க்கான சிறப்பு தரிசனம் என 2 பிரிவுகளாக செல்லும் வகையில் தடுப்புகள் வைக்கப்பட உள்ளன.

    கோவிலில் சித்ரா பவுர்ணமி ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:-

    ராஜகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், பேகோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் பகுதிகளில் பக்தர்கள் செல்ல தூய்மையான முறையில் வைத்திருத்தல் வேண்டும்.

    கோவிலை சுற்றி ஆட்டோ, சுற்றுலா வாகனங்கள், பஸ்கள் ஆகியவை நிறுத்த அனுமதியில்லை. சாலையோர சிறுவணிகர்கள் அனுமதி மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமே சிறு வணிக கடைகள் அமைக்க வேண்டும்.

    மேலும் ஆயிரங்கால் மண்டபத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சோதனை முயற்சியாக 500 முதல் 1000 பக்தர்களை திட்டி வாசல் நுழைவு பகுதியிலிருந்து அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் பாதாள லிங்கத்தினை தரிசித்து விட்டு பெரிய நந்தி வழியாக பக்தர்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவர்கள்.

    பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும். குற்ற நிகழ்வகள் ஏதும் நடைபெறாமல் இருக்க பக்தர்கள் பொது மக்களின் பாதுகாப்பிற்காக 5000 - க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    14 கி.மீ கிரிவலப்பாதையில் தூய்மையான முறையில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், திருவண்ணாமலை வருவாய் அலுவலர் மந்தாகினி, அருணாசலேசுவரர் கோவில் செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×